“கான்ட்ராக்டரை தாக்கிய சந்தானம்…நீதிமன்றத்தில் போட்டுள்ள உத்தரவு”!!

உலக சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு என எப்போதுமே ஒரு தனி இடம் இருக்கும். ஜாம்பவான் சார்லி சாப்ளினில் முதல் தமிழக மக்களை தான் காமெடியால் கட்டி போட்ட நாகேஷ் வரை அனைவருக்குமே அழியாத பெயரும், புகழும், மரியாதையும் எப்போதுமே இருந்து வருகிறது. இந்த வரிசையில் தமிழ் சினிமாவின் கடந்த 2010 ஆண்டுகளில் மிக பெரிய அளவில் காமெடியில் கோலோச்சியவர் நடிகர் சந்தானம்.

"கான்ட்ராக்டரை தாக்கிய சந்தானம்...நீதிமன்றத்தில் போட்டுள்ள உத்தரவு"!! 1

விளம்பரம்

ஆரம்பகாலத்தில் விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியாக இருந்த லொள்ளு சபாவை 90’ஸ் கிட்ஸால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அதில் இருந்து வந்தவர் தான் சந்தானம். தொலைக்காட்சி மேடைகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய இவரை சிம்பு தன் இயக்கத்தில் வெளியான “மன்மதன்” படம் மூலம் திரைத்துறையில் அறிமுகம் செய்தார். குறுகிய காலத்திலேயே விஜய், அஜித், ரஜினி, சூர்யா, விக்ரம், கார்த்தி, சிம்பு, தனுஷ், விஷால், ஜீவா, ஆர்யா என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்து காமெடியில் கலக்கினார்.

தொடர்புடையவை  என்னடா பால்காரன் கெட்டப் போட்டு தண்ணி கேன் தூக்கிட்டு வர? குரேஷியை வச்சி செய்யும் பட்

"கான்ட்ராக்டரை தாக்கிய சந்தானம்...நீதிமன்றத்தில் போட்டுள்ள உத்தரவு"!! 3

விளம்பரம்

குறிப்பாக எம்.ராஜேஷ் இயக்கிய படங்களான “சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி” போன்ற படங்களில் காமெடியில் அதோகலாம் செய்து முன்னணி காமெடி நடிகர் என்பதை தாண்டி காமெடி ரோல் என்றால் சந்தானமே என இயக்குனர்கள் தேடும் அளவிற்கு முன்னேறினார். இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் வெளியான “அறை எண் 305இல் கடவுள்” படம் மூலம் தன்னால் நன்றாக நடிக்க முடியும் எனவும் நிரூபித்தார்.

"கான்ட்ராக்டரை தாக்கிய சந்தானம்...நீதிமன்றத்தில் போட்டுள்ள உத்தரவு"!! 5

விளம்பரம்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சோலோ ஹீரோவாக தன்னுடைய நாயகன் இன்னிங்ஸை துவங்கி தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2, சக்கைபோடு போடு ராஜா, டிக்கிலோனா போன்ற வணீக ரீதியில் வெற்றி வெற்றியடைந்த படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தின் தாக்கம் இன்னும் அவருக்கு பிரெச்சனையை கொடுத்து வருகிறது.

"கான்ட்ராக்டரை தாக்கிய சந்தானம்...நீதிமன்றத்தில் போட்டுள்ள உத்தரவு"!! 7

விளம்பரம்

அவருக்கு சொந்தமான இடத்தில் பெரிய கட்டிடம் கட்டுவதற்காக ஒரு பெரிய தொகையை கட்டிட காண்டிராக்டர் சண்முகசுந்தரத்திடம், நடிகர் சந்தானம் கொடுத்ததாகவும் ஆனால் சில காரணங்களால் அந்த பணி நின்று போனதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, தான் கொடுத்த பணத்தை நடிகர் சந்தானம் கேட்டபோது பணத்தை தராமல் இழுத்து அடித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு வளசரவாக்கத்தில் உள்ள கட்டிட காண்ட்ராக்டரின் அலுவலகத்தில் தனது மானேஜருடன் சென்று பணத்தை கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இது அப்போதைய செய்திகளில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

தொடர்புடையவை  STR மற்றும் Hansika நடிக்கும் Maha படத்தின் Trailer !

"கான்ட்ராக்டரை தாக்கிய சந்தானம்...நீதிமன்றத்தில் போட்டுள்ள உத்தரவு"!! 9

விளம்பரம்

அந்த காண்ட்ராக்டர் கொடுத்த வழக்கின் படி, இப்பொது சந்தானம் சென்னையை அடுத்த பூந்தமல்லியிலுள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் ஆஜராகி தன் பக்க நியாயத்தை கூறியுள்ளார். இந்த  வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் மாதம் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்த மாஜிஸ்திரேட் மீண்டும்  அப்போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். இத செய்திகள் இப்பொது பரபரப்பாக சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

விளம்பரம்

Video Courtesy – Thanthi TV.

விளம்பரம்

Leave a Comment