Watch the video below தமிழ் சினிமாவில் அடுத்த குஷ்பூ வாக வளம் வந்த நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் தனுஷ் நடித்த மாப்பிளை படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் முதல் படத்திலேயே தன்னுடைய வசீகர தோற்றதால் அனைவரையும் கட்டியிழுத்தார் ஹன்சிகா. ஆனால் இந்த படத்திற்கு முன்பே ஹன்சிகா ஹிந்தி, தெலுங்கு, கன்னட மோழி படங்களில் நடித்துள்ளார் ஹன்சிகா. இதை தொடர்ந்து ஹன்சிகா எங்கேயும்

காதல் , வேலாயுதம் , ரோமியோ ஜூலியட் என பல படங்களில் நடித்தார். இறுதியாக 100 திரைப்படத்தில் நடித்த ஹன்சிகா அதன் பிறகு சினிமாவை விட்டு காணாமல் போய் விட்டார். இவர் நடித்த மகா எந்த திரைப்படம் பல நாட்களாக வெளிவராமல் இருந்தது. தற்போது இவர் நடித்த மகா திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஜமீல் இயக்கியுள்ளார். அதையும் தாண்டி இந்த படத்தில் ஹன்சிகாவுடன் சிலம்பரசன் நடித்துள்ளார். இதனாலேயே

இந்த படத்திற்கு பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. ஏற்கனவே ஹன்சிகா மற்றும் சிம்பு காதலித்த செய்தி அனைவருக்குமே தெரியும். தற்போது அவர்கள் பிரிந்துவிட்ட நிலையில் இந்த படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். சிம்பு ரசிகர்களுக்கும் சரி , ஹன்சிகாவை நீண்ட நாட்களுக்கு பிறகு படத்தில் பார்க்கும் ஹன்சிகா ரசிகர்களுக்கும் சரி இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.Watch the video below