விஜய் டிவியில் ஒளிபரப்பான 7C என்ற தொடரின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீநிதி. இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சில நாடகங்களில் நடித்து வந்தார். வலிமை படம் வெளியானபோது அந்த படம் குறித்து விமர்சனம் செய்தார். இதனால் இவரை அஜீத் ரசிகர்கள் பலரும் ட்ரோல் செய்தனர். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ஸ்ரீநிதி, தொடர்ந்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தார். தற்போது அவர் மனநல மருத்துவத்திற்கு பின்னர் மீண்டும் சோசியல் மீடியாவில் களம் இறங்கியுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது,எனக்கு இந்த சோசியல் மீடியாதான் நிம்மதி சந்தோசம் கொடுத்துச்சு.நான் விமர்சனம் செய்வதற்கு பெரிய ஆள் இல்லை,வலிமை படம் ஒரு படம் இப்போகூட என்கிட்டே கேட்டா வலிமை சுமார்னு தான் சொல்லுவேன்,ஏன்னா இந்த படத்தை விமர்சனம் பண்ணுர உரிமை எல்லாரிடமும் இருக்கு.வலிமை படத்தில் வருபவர்களை போல யாரும் தவறு செய்யக்கூடாது,அதுவும் இந்தியாவில் பிறந்தவர்கள் கட்டாயம் இதனை செய்யக்கூடாது என தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

வலிமை பட சர்ச்சைக்கு பின்னர் ஸ்ரீநிதி பல சர்ச்சை வீடியோக்களை வெளியிட்டு வந்தார். சிம்பு தன்னை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சிம்புவின் வீட்டிற்கு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் தனது நெருங்கிய தோழி நட்சத்திராவை திருமணம் செய்து கொள்ள இருக்கும் நபர் தவறானவர் என்றும், நட்சத்திராவை அடைத்து வைத்துள்ளனர் என்றும், அந்த நபரை திருமணம் செய்து கொண்டால் நட்சத்திராவிற்கு விஜே சித்ராவின் நிலைமை தான் என்றும் அவர் கூறியிருந்தார். எப்படியாவது என் தோழி நட்சத்திராவை காப்பாற்ற வேண்டும் என்று ஒரு லைவ் வீடியோவில் ஸ்ரீநிதி பேசினார்.

இந்த நிலையில் சிறிது காலம் ஓய்வுக்குப் பின்னர் சோசியல் மீடியாவில் தலைகாட்ட தொடங்கியுள்ளார். அதில் பேசிய அவர் நான் இப்போதும் சொல்கிறேன் வலிமை படம் சுமார் தான் என்று கூறியுள்ளார். ஏற்கனவே வலிமை படம் பற்றி பேசித்தான் அஜித் ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டார். அதுதான் அவர் மன உளைச்சலுக்கு காரணம் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அவர் வலிமை படம் பற்றி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண .. Watch the below video..