மோசமான செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் போன்றவற்றால் எத்தகைய நல்ல திட்டங்களும் எதிர்வினையை சந்திக்கும் என்பது குறித்து முந்தைய பகுதியில் கண்டோம்
.மோடியின் முதல் மற்றும் இடண்டாம் ஆட்சி காலத்தில் ஏற்பட்டுள்ள அடிப்படை மாற்றங்களால் பிரதமரின் திட்டங்கள் யாவுமே அரசு அதிகாரிகளால் பின்பற்ற முடியவில்லை.
முந்தையை அரசியல் பொருளாதார அமைப்பு முறையில் இதர சந்தை சக்திகள் வளங்களை வழிப்படுத்த அரசாங்கத்தின் குறுக்கீடு முக்கியமானதாக கருதப்பட்டது, இருப்பினும் அரசங்காத்தின் குறுக்கீடு வெகு காலத்திற்கு இருக்கவில்லை. அதற்கு பதிலாக தற்போது, நிறுவப்பட்டிருக்கும் அதிகார மையப்படுத்துதல், உயர்மட்ட அதிகாரிகளை பொம்மைகளாக வைத்துக்கொள்ள முயல்கிறது. உதாரணமாக தூய்மை இந்தியா, உஜ்வாலா போன்ற திட்டங்களை செயல்படுத்தும் ஒரு ஊழியராக தான் அதிகாரமிக்க அதிகாரிகளை மத்திய அரசு எதிர்பார்க்கிறது. இந்த எதிர்பார்ப்புகள் சுயாட்சி திறன் கொண்ட ரிசர்வ் வாங்கி மற்றும் தேர்தல் ஆணையம் வரையில் நீள்கிறது.
இன்னும் கொஞ்சம் ஊடுருவி பார்த்தோமேயானால், பல்வேறு துறைகளை சார்ந்த அமைச்சர்கள் கூட தங்களது துறைகளுக்கான கொள்கையை வடிவமைப்பதோ அல்லது அறிவுரை வழங்குவதோ குறிப்பிட்ட அளவிற்கு தான் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மோடியின் அதிகார குவியல் முறையினால் குஜராத் போன்ற சில மாநிலங்கள் வளர்ச்சி பெற்றிருப்பதாக சிலர் வாதிட்டு வரலாம். ஆனால் இந்தியா போன்ற பெரிய கூட்டமைப்பு நாட்டில், அது தீர்வாக அமையாது. குறிப்பாக பொருளாதாரம் சார்ந்த விவகாரத்தில் தோல்வியை தரக்கூடிய அளவிற்கு மோடியின் முதல் அரசாங்கம் செயல்பட்டிருக்கிறது.

அதிகார மைய மயமாக்கல் விளைவாக, மத்தியில் உள்ள அரசாங்கம் மாநிலத்தின் ஆட்சியில் இருப்பவர்களை தங்களது கைப்பாவையாக வைத்துக்கொள்ளும் நிலை ஏற்படும். அதே வேளையில் மாநில அரசாங்கத்தினருக்கு பொருளாதாரம் குறித்தான பார்வை இல்லாத பட்சத்தில் முழுமையாக மத்திய அரசை மட்டுமே நம்பி பிழைக்க நேரிடுவதால், மெக்கார்த்திசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு மாநிலமாகுமாக உருப்பெறும்.
ஆனால் இந்திய கூட்டமைப்புக்கு இது புதியதான நிகழ்வு கிடையாது. 1970களில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது தீவிரப்படுத்தப்பட்ட அதிகார மையமயமாக்கலால் உண்டான தோல்வி வரலாற்றின் “கருப்பு பக்கமாக” பதிவாகியுள்ளது. எம்ஆர்டிபி சட்டம், பெரா சட்டம் அல்லது ஒரே இரவில் வங்கிகளை தேசியமயமாக்கும் போன்ற நடவடிக்கைகள் அனைத்தும் பொருளாதார பார்வைக்கு அடிப்படையின்றி ‘தீவிர மையப்படுத்தப்பட்ட’ ஆளுகை கட்டமைப்பின் கீழ் எடுக்கப்பட்டது என்பதை மறுத்துவிட முடியாது.
தொடரும்…
தொகுப்பு: விடுதலை தமிழ்முரசு