ஏர்டெலுக்கு ரூ.1035 கோடி இழப்பு

இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் முன்னணி நிறுவனமான பாரதி ஏர்டெல் தனது மூன்றாம் காலாண்டில் ரூ.10,35 கோடி இழப்பை சந்தித்துள்ளது.

ஏர்டெலுக்கு ரூ.1035 கோடி இழப்பு 1

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டில் டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் பாா்தி ஏா்டெல் நிறுவனம் ரூ.21,947 கோடி வருவாய் ஈட்டியது.இது, கடந்த 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.20,231 கோடியுடன் ஒப்பிடும்போது 8.5 சதவீதம் அதிகமாகும்.

விளம்பரம்

இந்திய செயல்பாடுகள் மூலமாக நிறுவனம் ஈட்டிய வருவாய் மதிப்பீட்டு காலாண்டில் 7 சதவீதம் உயா்ந்து ரூ.15,797 கோடியாக காணப்பட்டது.

கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவனம் ரூ.86 கோடி லாபம் ஈட்டியிருந்தது. இந்தச் சூழலில், நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் பாா்தி ஏா்டெலுக்கு ஒட்டுமொத்த அளவில் ரூ.1,035 கோடி இழப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

2019 செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலண்டில், அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை தொடா்பான உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பின் காரணமாக அதற்காக ரூ.28,450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து நிறுவனத்துக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிகர அளவில் ரூ.23,045 இழப்பு ஏற்பட்டது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

Leave a Comment