கடந்த மூன்று நாட்களாக இணையத்தில் சர்ச்சையாகி வரும் ஒரு செய்தி, இரவின் நிழல் படத்தில் நடித்த நடிகை பிரகிடா சேரி குறித்து பேசியதுதான். இரவின் நிழல் படம் 96 மணி நேரத்தில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நான் லீனியர் படமாகும். இந்த படத்தை பார்த்திபன் இயக்கி அதில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகையாக யூடியூப் பிரபலம் பிரகிடா நடித்திருந்தார். படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆன நிலையில் அவரைச் சுற்றி ஒரு ஓயாத சர்ச்சை ஒன்று நடந்து வருகிறது. படம் வெளியான அன்று தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார் பிரிகிடா. அதில் படத்தில் அதிகமாக கெட்ட வார்த்தை பேசப்படுகிறதே? என்று அவரிடம் கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதில் அளித்த அவர் சேரிக்கு சென்றால் நம் காதுகளில் கெட்ட வார்த்தை மட்டுமே கேட்கும், அவர்கள் அப்படித்தான், அதுதான் படத்தில் காட்டப்பட்டுள்ளது. சினிமாவிற்காக ஏமாற்ற முடியாது என்று அவர் பேசி இருந்தார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. சமத்துவம், சமூக நீதி என்றெல்லாம் பேசும் இந்த நாட்டில் இன்னும் இது போன்ற பிற்போக்குத்தனமான கருத்துக்கள் உலவி கொண்டிருக்கின்றன. பிற்போக்கு கருத்துக்கள் மக்கள் மனங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று பல தலைவர்கள் போராடி இந்த நிலைக்கு நாம் வந்திருக்கும் நிலையில் மீண்டும் இது போன்ற பிற்போக்குத்தனமான பேச்சுக்கள் கண்டிக்கத்தக்கது என்று நெட்டிசன்கள் பிரகிடாவை வறுத்து எடுத்து விட்டனர். மேலும் அவர் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் பலரும் ஆவேசமாக தெரிவித்தனர். பிரச்சனை பூதாகரமான நிலையில் அவர் சமூக வலைத்தளங்களில் பதிவுகளின் மூலம் மன்னிப்பு கோரி இருந்தார் பிரிகிடா. தொடர்ந்து தியேட்டர்களுக்கு ப்ரமோஷனுக்காக செல்லும் பார்த்திபன் மற்றும் பிரகிடா இந்த சர்ச்சை குறித்து மன்னிப்பு கேட்டு வந்தனர். இந்த நிலையில் பிரகிடாவின் நண்பர் ஒருவர் சோசியல் மீடியாவில் தோன்றி அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து சோசியல் மீடியாவில் பிரகிடா தோன்றி, நான் உங்கள் அனைவரையும் மிகுந்த காயப்படுத்தி விட்டேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். என் மீது இருக்கும் அன்பினால் நீங்கள் இவ்வாறு செய்கிறீர்கள் என்பது எனக்கு புரிகிறது. நான் எவ்வளவு ரெஸ்பான்சிபிலிட்டி உடன் நடந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு நீங்கள் புரிய வைத்துள்ளீர்கள். என் தந்தை எனக்கு சமத்துவத்தை சொல்லிக் கொடுத்து தான் வளர்த்தார். நான் பேசியது எவ்வளவு பெரிய தவறு என்று எனக்கு தற்போது புரிந்துள்ளது. என்னை கைது செய்ய வேண்டும், என் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்று பலரும் கூறியிருக்கிறீர்கள். அவர்கள் அனைவரிடமும் நான் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கூறியுள்ளார். மேலும் தான் தெரியாமல் பேசி விட்டேன் என்றும் அவர் கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். அவரின் முழு வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Cineulagam