“டீவீட்டுக்கு ட்ரீட்”!!”ரசிகர்களுக்கு பார்த்திபன் கொடுக்கவுள்ள ட்ரீட்”!!

அண்மையில் வெளியான பார்த்திபனின் “இரவின் நிழல்” படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. புதுவிதமாக “Non-Linear Singular Shot” என்ற முறையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ஒரு 50 வயது மனிதனின் வாழ்க்கையை 10 வயது முதல் மொத்தமாக திரும்பி பார்க்கும் கதையாக உருவாகியுள்ளது. முதல்முறை மேக்கிங் விடியோவை படத்துடன் இணைத்து தாங்கள் இந்த படம் உருவாக்க எடுத்துக்கொண்ட கஷ்டத்தை முழுவதுமாக பதிவு செய்துள்ளார்கள்.

"டீவீட்டுக்கு ட்ரீட்"!!"ரசிகர்களுக்கு பார்த்திபன் கொடுக்கவுள்ள ட்ரீட்"!! 1

விளம்பரம்

எப்போதும் புதிய முயற்சிகளில் வரும் பார்த்திபன் “இரவின் நிழல்” படத்தின் வெற்றியை கொண்டாட இப்பொது புது வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். படத்தை 5 பேருடன் சேர்ந்து பார்த்து அந்த டிக்கெட்டின் போட்டோவை ஒரு முகவரி கொடுத்து அதற்கு அனுப்பி வைக்கும் படி கூறியுள்ளார். ஒவ்வொரு ஊரிலும் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு குழுவை தன்னுடன் ஒரு இரவில் டின்னர் ட்ரீட் கொடுத்து அவர்களுடன் கலந்து உரையிடவுள்ளார். இதனை ஒரு விடியோவாக செய்து தன்னுடைய யூடிப் பக்கத்தில் அவரே வெளியிட்டுள்ளார்.

தொடர்புடையவை  இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..

"டீவீட்டுக்கு ட்ரீட்"!!"ரசிகர்களுக்கு பார்த்திபன் கொடுக்கவுள்ள ட்ரீட்"!! 3

விளம்பரம்

Tweetuku treat என தலைப்பு இட்டு, அந்த விடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இப்பொது அந்த வீடியோ சமூகவலைதங்களில் வைரலாகி வருகிறது. புது முயற்சிகளுடன் எப்போதும் வரும் பார்த்திபனுக்கு இந்த முறை ரசிகர்கள் இவ்வளவு வரவேற்பை தந்துள்ளது, மக்களின் சினிமா ரசனை மாறிவருவதை காட்டுகிறது.

"டீவீட்டுக்கு ட்ரீட்"!!"ரசிகர்களுக்கு பார்த்திபன் கொடுக்கவுள்ள ட்ரீட்"!! 5

விளம்பரம்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையில், ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்து, பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்து வெளிவந்துள்ள இந்த படத்தில் அவருடன் பிரிக்கடா, வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் என பலர் நடித்துள்ளனர். இந்த படம் நிச்சயம் இந்த வருடத்தின் தேசிய விருதுகளின் பட்டியலில் இருக்கும் என ரசிகர்கள் நம்பி வருகிறார்கள்.

விளம்பரம்

 

விளம்பரம்

Leave a Comment