தமிழ் சினிமாவில் நிறைய தனித்துவமான அம்சங்களுடன் வெற்றி பெற்றவர்கள் நிறைய பேர் உள்ளனர். அந்த வகையில் வில்லன் கதாபாத்திரத்திற்கான எந்த வித உடற்கட்டோ, திடகாத்திரமான உடல்வாகோ இல்லாமல் வெறும் தன்னுடைய காந்தக்குரலால் மிக பெரிய ஆளுமையுடன் தனியாக மக்களிடம் மிகவும் புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் நடிகர் ரகுவரன். 1990களில் மிக முக்கிய வில்லன் நடிகராகவும், சிறந்த குணச்சித்திர நடிகராகவும் விளங்கினார். Video given below.

ஏழாவது மனிதன் என்ற பாடம் மூலம் அறிமுகமான ரகுவரன், ஒரு ஓடை நதியாகிறது என்ற படம் மூலம் பிரபலமடைந்தார். பின்னர் ரஜினியுடன் Mr.பாரத் படம் மூலம் மிக முக்கிய நடிகராக கவனிக்கப்பட்டு பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி மொழி படங்களில் நடித்து தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமாக திகழ்ந்தார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியான “முதல்வன்” படத்தில் நடித்ததற்காக 1999ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறந்து வில்லன் நடிகர் விருதை வென்றுள்ளார்.

1996ஆம் ஆண்டு அப்போது மிகவும் பிரபலமாக இருந்த நடிகை ரோகினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரிஷி என்ற மகன் 1998ஆம் பிறந்தார். திருமணமான 7 ஆண்டுகளில் 2006ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். அப்டோது முதலே இந்த விவாகரத்து பேச்சு மீடியாக்களில் மிகவும் பேசப்படும் தலைப்பாக உள்ளது.

ஆனால் இரு தரப்பினருமே என் பிரிந்தோம் என்ற விஷயத்தை கூற மறுத்துவிட்டார்கள். 2008ஆம் ஆண்டு ரகுவரன் மறைந்த பின்னரும் ரோகினி மிகவும் கண்டிப்பாக தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விஷயத்தை கூற மறுத்து வந்தார். சென்னையில் சமீபத்தில் “குடும்ப வன்முறைக்கு எதிரான சிறப்பு மாநாடு” நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினராக பேசிய நடிகை ரோகினி, இதனை ஆண்டு காலம் கூறாமல் இருந்து வந்த விஷயத்தை அந்த மேடையில் கூறியுள்ளார்.

“பெண்களுக்கு சமையல் செய்யவும், திருமணமாகி செல்லும் குடும்பத்தின் பாரத்தை சுமக்கவும், சமையல் செய்யவும் மட்டுமே அவர்கள் பிறந்தது முதலே பழக்கப்படுத்த படுகிறார்கள். என்னுடைய மகனின் வளர்ப்பு மற்றும் அந்த குடும்பத்தில் எனக்கு இருந்திராத பாதுகாப்பு காரணமாகவே நான் விவாகரத்து பெற்றேன்” என கூறியுள்ளார்.
Video Courtesy – Indiaglitz