
நடிகர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி. இவர் இயக்கத்தில் தற்போது காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், கௌரி கிஷன் போன்றோர் நடிப்பில் “பேப்பர் ராக்கெட்” என்ற படம் உருவாகியுள்ளது. ஜீ 5 OTT தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ள இந்த படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிம்பு மற்றும் உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய சிம்பு, “முதல ஸ்டாலின் Uncle’க்கும், உதய் அண்ணாவுக்கும் ரொம்ப thanks, எனசொல்றேனு உங்களுக்கே தெரியும், அப்பா treatment’க்கு அமெரிக்கா போக வந்த விசா ப்ரோப்லேம ரொம்ப ஈஸியா முடிச்சி கொடுத்தாங்க, அதுமட்டும் இல்லாம இப்போவரைக்கும் தொடர்ந்து Follow பண்ணி என்ன ஆகுதுன்னு கேட்டுட்டே இருந்தாங்க, இது ரொம்ப பெரிய விஷயம், அதுக்கு ரொம்பவே thanks சொல்லிக்குறேன்னு” பேசி மேலும் படத்தின் இயக்குனர் கிருத்திகாவிற்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

இந்த வீடியோ இப்பொது சமூகவலைத்தளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. வெறும் அரசியல்வாதியாக மட்டும் இல்லாமல், தொடர்ந்து சினிமாவிலும் உதயநிதி பயணப்பட்டு கொண்டிருப்பதற்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். கிருத்திகா ஏற்கனவே சிவாவின் “வணக்கம் சென்னை” படத்தை இயக்கி இருந்தார். அதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் “காளி” என்ற படம் இயக்கியிருந்தார்.

சிம்புவின் நடிப்பில் அடுத்து “வெந்து தணிந்தது காடு” படம் வெளியாகவுள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன், சிம்பு மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மூவரும் இனியும் இணையும் 3வது படம் இது. படத்தின் வெளியீடு செப்டம்பர் 15ஆம் தேதி என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் சிம்பு தற்போது “பத்துதல” படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக உள்ளார். இதனை தொடர்ந்து இவரிடம் சுதா கொங்கரா இணையவுள்ளதாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.
Video Courtesy – NewsReel 24*7