கடந்த சில நாட்களாகவே சின்னாத்திரை ரசிகர்களின் மிக முக்கியமான பேச்சாக இருப்பது பாரதி கண்ணம்மா அருண் பிரசாத்தும், ராஜா ராணி 2 அர்ச்சனாவும் காதலிப்பதாக வரும் தகவல்கள் தான். மறைமுகமாக இருவரும் நிச்சயதார்த்தமும் முடித்து விட்டதாக சில புரளிகளும் கிளம்பியுள்ளன. இதனை இருவரும் ஆதரிக்கவில்லை என்றாலும், இப்பொது வரையில் மறுக்கவும் இல்லை. இதுவே இத விஷயத்தை உறுதி செய்வதாக பேசப்பட்டு வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்போதைய ரசிகர்களின் பிடித்தமான தொலைக்காட்சி தொடர்கள் என்றால் பலரும் விஜய் டிவியில் ஒளிபாப்பாகும் ஏதோ ஒரு தொடரை தான் கூறுவார்கள். அவ்வாறு பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்களில் பாரதி கண்ணம்மா தொடரும் ஒன்று. எப்போதும் டிஆர்பியில் முதலில் இல்லை என்றாலும் எதோ ஒரு இடம் பெற்றுவிடும். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இந்த தொடர் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது.

அதே போல விஜய் டிவியின் மற்றொரு முன்னணி தொடர் “ராஜா ராணி 2”. முதல் சீசன் மிக பெரிய அளவில் வெற்றியடைந்த பிறகு இப்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஹிந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தமிழில் “என் கணவன் என் தோழன்” என்ற பெயரில் விஜய் டிவியிலேயே நீண்ட ஆண்டுகள் முன்பு ஒளிபரப்பான இந்த தொடரை மீண்டும் தமிழில் மறுக்கம் செய்து ஒளிபரப்பி வருகிறார்கள். இதற்கும் எப்போதும் போல ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இவர்களின் காதல் விவகாரம் இப்பொது மிக பெரிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில், தற்போதுநடிகை அர்ச்சனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதற்கு “உன்னோடு காதல் என்று ஊரு சொன்னது” என மறைமுமாக அருண் பிரசாத்தை குறித்து மறைமுகமாக பேசிப்பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த விடியோவை நீங்களும் காண…..
Video Courtesy – Celebrities Viral Videos