“வாழ்க்கைல உச்சம் தொட்டுட்டேன்…ஆனா அவர் கிட்ட இருக்க 10% நிம்மதி கூட இல்ல – நெகிழ்ந்த ரஜினி”!!

"வாழ்க்கைல உச்சம் தொட்டுட்டேன்...ஆனா அவர் கிட்ட இருக்க 10% நிம்மதி கூட இல்ல - நெகிழ்ந்த ரஜினி"!! 1

40 ஆண்டுகால சினிமா வாழ்க்கை. துவங்கியது முதல் இன்று வரை யாராலும், எந்த தோல்வியாலும் சோர்ந்து விடாமல் இன்றளவும் முன்னணியில் இருக்கிறார். 70களில் இவருடன் அறிமுகமான பல நாயகர்கள் இப்பொது சினிமா துறையிலேயே இல்லாமல் போய்விட்டார்கள். இருப்பினும் இவர் இன்று ஆசிய அளவில் உற்றுநோக்கப்படும் மிக முக்கிய நடிகராக இருந்து வருகிறார். 70வயதை தாண்டியும் இவர் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் நடிகர்கள் பட்டியலில் முதல் இடத்தில உள்ளார்.

விளம்பரம்

"வாழ்க்கைல உச்சம் தொட்டுட்டேன்...ஆனா அவர் கிட்ட இருக்க 10% நிம்மதி கூட இல்ல - நெகிழ்ந்த ரஜினி"!! 3

அண்மையில் இவர் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கிய “அண்ணாத்தே” திரைப்படம் வெளியாகி 200 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய போதிலும், மிக மோசமான விமர்சனத்தையே சந்தித்தது. இருப்பினும் ரஜினி என்ற ஒற்றை சொல்ல படம் அவ்வளவு பெரிய வசூலை ஈட்ட உதவியது. இதனை தன்னுடைய அடுத்த படத்தில் சரி செய்ய யோசித்து தொடர்ந்மது “கோலமாவு கோகிலா, டாக்டர்” என வெற்றி படங்களை கொடுத்த நெல்சனுடன் கூட்டு சேர்ந்துள்ளார் ரஜினி.

விளம்பரம்
தொடர்புடையவை  யாரு சொன்னது எனக்கு உடம்பு சரி இல்லனு? ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் சமந்தா..!

"வாழ்க்கைல உச்சம் தொட்டுட்டேன்...ஆனா அவர் கிட்ட இருக்க 10% நிம்மதி கூட இல்ல - நெகிழ்ந்த ரஜினி"!! 5

இந்த படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, தற்போது அதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. படம் அடுத்த ஆண்டு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற கிரியா யோகா புத்தக வெளியிட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். யோகதா சத்சங்க நூலை என்ற நூலையும் வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியபோது, “எத்தனையோ படங்கள்  எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்தது ராகவேந்திரா, பாபா படங்கள் தான். இந்த இரு படங்கள் வந்த பின்னர் தான் அனைவருக்கும் இவர்கள் இருவரையும் தெரிய வந்தது. எனக்கு மிகவும் சந்தோஷமான விஷயம். என் ரசிகர்கள் இரண்டு பேர் யோகியாக மாறி இருக்காங்கனு கேள்விபட்டேன்.

விளம்பரம்

"வாழ்க்கைல உச்சம் தொட்டுட்டேன்...ஆனா அவர் கிட்ட இருக்க 10% நிம்மதி கூட இல்ல - நெகிழ்ந்த ரஜினி"!! 7

வாழ்க்கையில் பணம், பேர், புகழ் எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன், அனைத்து உச்சங்களையும் தொட்டுவிட்டேன். ஆனால், சித்தர்களிடம் உள்ள சந்தோஷம், நிம்மதியில் எனக்கு 10 சதவீதம் கூட இதுவரை கிடைக்கவில்லை என்று நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். இந்த வீடியோ இப்பொது சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த விடியோவை காண…..

விளம்பரம்
தொடர்புடையவை  மேடையில் திடீரென என்ட்ரி கொடுத்து யுவனுடன் சேர்ந்து மரண குத்து குத்திய அதிதி..

Video Courtesy – Thi Cinemas

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment