“பெண்களுக்கு மிகவும் பணம்”!!குழப்பத்தில் இருக்கும் சிபி…அசால்ட்டாக விளக்கும் ஆண்ட்ரியா”!! கவனம் ஈர்க்கும் வட்டம் ட்ரைலர்”!!

Dream Warriors Pictures சார்பில் தற்போது தயாராகி வரும் படம் “வட்டம்”. சிபி சத்யராஜ், ஆண்ட்ரியா, பாலசரவணன், அதுல்யா ரவி, சைத்ரா ரெட்டி, சசி என பலர் நடிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. படத்தை மதுபானக்கடை படத்தை இயக்கிய கமலக்கண்ணன் இயக்கிவருகிறார். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டிரெய்லரின் ஆரம்பதிலேயே சிபிராஜ் மிகவும் சோகமாக இருப்பது போல துவங்குகிறது. அதனைத்தொடர்ந்து பெண்கள் மேல் அவர் கோவமாக இருப்பது போலவும், எதனால் அவர் பெண்களை வெறுக்கிறார் என்கிற கோணத்திலும் ட்ரைலர் செல்கிறது.

விளம்பரம்

"பெண்களுக்கு மிகவும் பணம்"!!குழப்பத்தில் இருக்கும் சிபி...அசால்ட்டாக விளக்கும் ஆண்ட்ரியா"!! கவனம் ஈர்க்கும் வட்டம் ட்ரைலர்"!! 1

அதிலும் குறிப்பாக அவருக்கு உண்மையான காதலை விட பணம் ஏன் பெருசா தெரியணும்?”, “இந்த பொண்ணுங்க எல்லாம் ஏன் இப்படி இருக்காங்க” என்ற கேள்வி திரும்ப திரும்ப வந்து கொண்டே இருக்கிறது. கடைசியில் நடிகை ஆண்ட்ரியா பெண்களை பற்றி பேசும் வசனமும் மிகவும் கவனம் ஈர்க்கிறது.

விளம்பரம்

படத்தில் வரும் நக்கலைட்ஸ் சசி பேசும் “பெரிய இரும்பு கதவை திறக்க பலம் தேவையில்லை சின்ன சாவி இருந்தால் போதும்” என்ற வசனம் உண்மையிலேயே ரசிக வைக்கிறது. அதே போல பாலசரவணன் பேசும் “drainage clean பண்றவன விடவா நீ ரொம்ப கஷ்டபப்ட்டு உழைக்கபோற, அவுங்களும் முன்னுக்கு வந்துட்டாங்களா?” என்ற வசனமும் கவனம் ஈர்க்கிறது.

தொடர்புடையவை  பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து அடுத்த சிங்கிள் 'ராட்சஸ மாமனே' வெளியானது.!

"பெண்களுக்கு மிகவும் பணம்"!!குழப்பத்தில் இருக்கும் சிபி...அசால்ட்டாக விளக்கும் ஆண்ட்ரியா"!! கவனம் ஈர்க்கும் வட்டம் ட்ரைலர்"!! 3

விளம்பரம்

அதைத்தொடர்ந்து வெவ்வேறு பிரச்சனைகளில் இருக்கும் மனிதர்கள் ஒரு வட்டத்திற்குள் சந்திக்கும் பொழுது ஏற்படும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதைக்களமாக உருவாக்கப்பட்டுள்ளது. நிறையவே suspense, chasing, சண்டைக்காட்சிகள் கொண்டு திரில்லர் பாணியில் படம் உருவாகியுள்ளது.

"பெண்களுக்கு மிகவும் பணம்"!!குழப்பத்தில் இருக்கும் சிபி...அசால்ட்டாக விளக்கும் ஆண்ட்ரியா"!! கவனம் ஈர்க்கும் வட்டம் ட்ரைலர்"!! 5

விளம்பரம்

சிபிராஜின் நடிப்பில் கடந்த மாதம் மாயோன் திரைப்படம் வெளியாகி பல பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது அவரின் நடிப்பில் வட்டம் திரைப்படம் வெளியாக இருக்கிறது. வரும் 29ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு நிச்சயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 28ஆம் தேதி அருள் சரவணன் நடிப்பில் “தி லெஜெண்ட்”, 29ஆம் தேதி சந்தானம் நடிப்பில் “குலுகுலு” போன்ற படங்களும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Video Courtesy – Sony music south

விளம்பரம்

Leave a Comment