இந்திய சினிமாவில் நடிகர்களை போல நடிகைகள் கோலோச்சுவது மிகவும் கடினம். எப்படி முயன்றாலும் குறைந்தது 10 ஆண்டுகள் மட்டுமே நீடித்து நிற்க முடியும். அதுவும் முன்னணியில் இருப்பதெல்லாம் எந்த நடிகைக்கு அவ்வளவு எளிதாக நடந்து விடுவதில்லை. ஏனெனில் நடிகைகள் திருமணம் ஆனது பின்னர் அவர்களே சில காலம் ஒதுங்கி விடுவார்கள். இல்லையேல் திருமணமானால் துறையில் இருப்பார்களே அவர்களை நாயகியாக காண்பதில்லை.

இது அனைத்திற்கும் சாட்டை அடிகொடுத்து அறிமுகமாகி 15 ஆண்டுகள் கடந்தோடியும் இன்றும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நாயகியாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. கேரளாவில் தனியார் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த இவர் மலையாள சினிமா அறிமுகப்படுத்தினாலும், தமிழில் இவர் நடித்த “ஐயா” படமே இவருக்கு மிக பெரிய திருப்புமுனையாக அமைந்தது. முதல் படமே நல்ல வெற்றி. அடுத்த படமே மிக பெரிய ஹீரோவான “சூப்பர்ஸ்டார்” ரஜினிகாந்துடன் “சந்திரமுகி” படத்தில் நடித்து மிக பெரிய அறிமுகத்தை பெற்றார்.

பின்னர் தமிழ் மட்டுமின்றி, தென்னிந்தியாவின் அணைத்து முன்னணி நாயகர்களுடனும் இணைந்து படம் நடித்து தமிழிலும், தெலுங்கிலும் யாரும் தொட முடியாத மிக பெரிய உச்சியை தொட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு வெளியான “நானும் ஒரு ரவுடி தான்” பட இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் மலர, 7 வருடங்கள் காதலித்து கடந்த ஜூன் 9ஆம் தேதி மிக பிரமாண்டமாக சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். பிரபலங்கள் பலரும் வாழ்த்த, மிக ஆரவாரமாக நடந்தேறியது இவர்களது திருமணம்.

இப்பொது தாய்லாந்தில் தேன்நிலவு கொண்டாடி வரும் இருவரும் அந்த போட்டோக்களை சமூகவலைத்தளங்களில் பரவவிட்டு வருகிறார்கள். மெஹெந்தி பங்க்ஷனில் துவங்கி, இப்பொது இவர்களுடைய தேன்நிலவு போட்டோக்கள் வரை அனைத்துமே ட்ரெண்ட்டாகி வருகிறது. இப்போது 37 வயதை ஈட்டியுள்ள நடிகை நயன்தாரா திருமண முடிந்த கையேடு மீண்டும் பிஸியாக படங்களில் நடிக்கவும் கதை கேட்டு வருகிறார். நடிகர் ஷாருக் கான் நடிப்பில் உருவாகி வரும் “ஜவான்”, பிருத்விராஜ் – அல்போன்ஸ் புத்திரன் இணையும் “கோல்ட்”, மெகாஸ்டார் சிரஞ்சீவியின் “காட்பாதர் என அடைத்துடுது முன்னணி நடிகர்களின் படங்களை கையில் வைத்துள்ளார்.

இவரை பாலிவுட் பிரபல இயக்குனர் கரண் ஜோகர் நயன்தாரா பற்றி கூறியது தற்போது மிக பெரிய பிரச்சனையை அவருக்கு கிளப்பியுள்ளது. அண்மையில் நடைபெற்ற “காபி வித் கரண்” நிகழ்ச்சியில் பாலிவுட்டில் விரைவில் அறிமுகமாகவுள்ள நடிகை சமந்தா, பாலிவுட் ஹீரோ அக்ஷய் குமாருடன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிக்கொண்டிருந்த போது, “தென்னிந்தியாவின் மிகப் பெரிய ஹீரோயின் சமந்தாவுடன் இணைந்து நடித்த போது…,“ என்று கூறிய போது இடை மறித்த கரண், “நயன்தாரா தன்னுடைய லிஸ்ட்டில் இல்லை” என நயன்தாராவை கலாய்க்கும் படி பேசினார். இருப்பினும் அதை சமாளித்து சமந்தா தொடர்ந்து பேசினார்.

நயன்தாரா பற்றி கரண் சொன்னது குறித்து நயன்தாரா ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். “ஆலியா பட் போன்ற வாரிசு நடிகைகள்தான் உங்களுக்குத் தெரியும், தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அவரைப் பற்றித் தெரிந்து கொண்டு பேசுங்கள் கரண், நயன்தாரா சுயமாக முன்னேறியவர், வாரிசு நடிகை அல்ல,” என்றும் பலரும் பலவிதமான கமெண்ட்டுகளை அளித்துள்ளனர்.