திருச்சியில் துப்பாக்கி சூடும் போட்டிக்காக கலந்து கொள்ள வந்த அஜித்தை ரசிகர்கள் பார்க்க குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாநகரம் கேகே நகரில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் செயல்படும் ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக அஜித்குமார் இன்று திருச்சி வந்துள்ளார. இந்த துப்பாக்கி சூடு போட்டியில் தமிழகத்தில் இருந்து 1300 மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அஜீத் பத்து மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் கலந்து கொண்டுள்ளார். இதற்காக அவர் இன்று காலை சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சிக்கு வந்தார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

அவர் வந்த செய்தி கேட்டு ரைபிள் கிளப் முன்பு ஏராளமான ரசிகர்கள் கூடினர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். கட்டுக்கடங்காத கூட்டத்தால் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் காவலர்கள் சிறிய தடியடி நடத்தி அவர்களை வெளியேற்றினர். பல மாவட்டங்களில் இருந்தும் திருச்சிக்கு ரசிகர்கள் குவிய தொடங்கியதால் காவல்துறை என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர். மேலும் குறைந்த அளவிலான போலீசார்களே ஈடுபட்டிருந்ததால் மோதல்கள் ஏற்படும் வாய்ப்பு இருந்தது. இதனால் ரசிகர்களுக்கு அஜித் கையசைத்து சென்றால் அவர்கள் கலைந்து சென்று விடுவார்கள் என்றும் காவல்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

காவல. துறையின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அஜித் மேல் தளத்திற்கு வந்து ரசிகர்களை பார்த்து கையசைத்து சென்றார். அப்போது ரசிகர்கள் உற்சாகத்தில் கத்தினர். கூட்டம் மேலும் அதிகரித்ததால் அங்கிருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அஜித் மேலும் இரண்டு நாட்கள் திருச்சியில் தங்கி இருந்து அந்த போட்டியில் கலந்து கொண்டு சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது. மேலும் அஜித் மேலிருந்து கையை அசைத்த போது அவரை பார்த்து வருங்கால முதல்வர் வாழ்க என்று அவரது ரசிகர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும் போலீசார் தடியடி நடத்தி கலைக்கும் என்ற போது போலீசாரை பார்த்து வேண்டாம் அடிக்காதீர்கள் என்று அஜித் கூறியது அவரது ரசிகர்களால் பரப்பப்பட்டு வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..
Youtube Video Code Embed Credits: Polimer News