வருடம்தோறும் நூறு நாட்கள் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் டிவி. இதில் சீசன் ஒன்றிலிருந்து ஐந்து வரை பங்கேற்ற பலர் கலந்து கொண்டுள்ளனர். பிபி ஜோடிகள் நிகழ்ச்சி முதல் சீசனை முடித்து தற்போது இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது. முதல் சீசனில் அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் டைட்டிலை வென்றனர். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் இரண்டாவது சீசன் நடந்து வருகிறது. இதில் ரம்யாகிருஷ்ணனும், நடன இயக்குனர் சதீஷும் நடுவர்களாக பங்கேற்று உள்ளனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொண்டு பிரபலமானவர்கள் தான் பாவனி மற்றும் அமீர். இவர்கள் இருவரும் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனமாடி வருகின்றனர்.

இதில் மற்றொரு போட்டியாளர் தான் தாமரை செல்வி. இவரும் பிக்பாஸ் சீசன் 5ல் பங்கெடுத்த ஒரு போட்டியாளர் தான். மிக எளிய பின்னணியில் இருந்து வந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் இவருக்கு சற்று செல்வாக்கு அதிகரித்தது. பிக் பாஸ் போட்டிகளில் கடுமையாக விளையாடி தனது திறமைகளை காட்டி மக்களை அதிகமாக ஈர்த்து வந்தார் இவர். இவர்தான் ஜெயிப்பார் என்று எண்ணியிருந்த நிலையில் குறைவான வாக்குகள் பெற்ற காரணத்தால் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டார். தற்போது இவரும் இவரது கணவரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

தற்போது இந்த நிகழ்ச்சியில் ஒரு கேம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் பைனல்ஸ்க்கு செல்ல தகுதியானவர்கள் இல்லை என்பவர்கள் புகைப்படம் மீது கரியை பூச வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தாமரை, அமிர் பாவனிக்கு பைனல் செல்ல தகுதி இல்லை என்று கூறுகிறார். ஏனென்றால் அமீர் ஏற்கனவே நடன இயக்குனராக இருக்கிறவர். அதனால் அவர்கள் இறுதிச்சுற்று செல்வதற்கு தகுதி இல்லை என்று கூறுகிறார். அதற்கு ரம்யா கிருஷ்ணன் தாமரை நீங்கள் ரொம்ப ஸ்மார்ட் என்று கூறுகிறார். ஆனால் தாமரை செய்து செயலால் அமீர் மற்றும் பாவனியின் முகம் மாறுகிறது. அவர்கள் இருவரும் கடுப்பானது போல் இருக்கிறது. பின்னர் ஐக்கி பெரியின் ஜோடியான அவர் எனக்கு யார் மீதும் கரி பூச விருப்பமில்லை என்று கூற, இது சாதாரணமான விளையாட்டு தான், இதை ஏன் சீரியஸாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்று ரம்யா கிருஷ்ணன் கோபமாகி கத்துகிறார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..
Youtube Video Code Embed Credits: Vijay Tv