பிளாஸ்டிக் முகம், ரோபோ போல நடை.! அண்ணாச்சியை மரணமாக கலாய்த்து தள்ளிய ப்ளூசட்டை மாறன்

நேற்று வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த படம் தான் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரின் தி லெஜெண்ட் படம். இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி என்ற இரண்டு இயக்குனர்கள் இயக்கியிருந்தனர். படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியானபோது மில்லியன் பார்வையாளர்களை அள்ளி இருந்த காரணத்தினால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது. ஆனால் இந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை என்றுதான் கூற வேண்டும். பலரும் கலவையான விமர்சனங்களை கொடுத்து வரும் நிலையில், பிரபல youtube திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தற்போது தி லெஜன்ட் படம் பற்றிய விமர்சனங்களை வைத்துள்ளார். அதில் அவர் கூறும் பொழுது படம் முழுவதுமே ஹீரோ மட்டுமே வந்து கொண்டிருந்தார், அவரை நம்மால் துளி கூட ரசிக்க முடியவில்லை, அதற்கு முக்கியமான காரணம் அவருக்கு துளியும் நடிப்பே வரவில்லை. அழுகை, சிரிப்பு, கோபம் என எல்லாவற்றிற்கும் ஒரே ரியாக்சன் தான் கொடுத்தார் சரவணன் என்று ப்ளூ சட்டை கூறினார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பிளாஸ்டிக் முகம், ரோபோ போல நடை.! அண்ணாச்சியை மரணமாக கலாய்த்து தள்ளிய ப்ளூசட்டை மாறன் 1

விளம்பரம்

இவரது முகத்தைப் பார்த்தால் ஏதோ பிளாஸ்டிக் முகம் போல் இருக்கிறது, ஏதோ ரோபோ போல படம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறார். படத்தில் ஹீரோவுக்கு சுட்டு போட்டாலும் நடிப்பு வராது என்று தெரிந்த பின்பும் இயக்குனர்கள் கதை, திரைக்கதையை ஆவது நன்றாக செய்திருக்க வேண்டாமா? லட்சக்கணக்கான படங்களில் இருந்து சில சீன்களை சுட்டு இந்த படங்களில் வைத்துள்ளனர். ஜேடி மற்றும் ஜெர்ரி இருவரும் விளம்பர படங்களை எடுக்கும் இயக்குனர்கள் என்பதால், இந்த படத்தையும் விளம்பர படம் போலவே எடுத்து வைத்துள்ளதாகவும் ப்ளூ சட்டை கடுமையாக விமர்சித்தார். இந்த வயதிலும் அண்ணாச்சி இவ்வளவு நடித்திருக்கிறார், அதை பாராட்டுங்கள் என்று ஒரு தரப்பினர் கூறினாலும், அவரது கடை விளம்பரங்களில் நடித்தால் அது பிரச்சனை இல்லை, விளம்பரங்களை நாம் காசு கொடுத்து பார்க்க போவதில்லை. ஆனால் இது அப்படி இல்லை இது ஒரு திரைப்படம் நாம் காசு கொடுத்து பார்க்க வேண்டும். ஆனால் இந்த படத்தில் பாராட்டுவதற்கு என்ன இருக்கிறது ஒன்றுமே இல்லை என்றும் ப்ளூ சட்டை கூறினார்.

தொடர்புடையவை  கையில் பீர் பாட்டிலுடன் கணவருடன் முதல் திருமண நாளை கொண்டாடிய ஹன்சிகா மோத்வானி.!

பிளாஸ்டிக் முகம், ரோபோ போல நடை.! அண்ணாச்சியை மரணமாக கலாய்த்து தள்ளிய ப்ளூசட்டை மாறன் 3

விளம்பரம்

50 வயதிற்கு மேற்பட்ட இரண்டு பேர் சந்தித்தால் உனக்கு எவ்வளவு சுகர் இருக்கிறது? எனக்கு எவ்வளவு சுகர் இருக்கிறது? நீ எங்கு வாக்கிங் செல்கிறாய்? என்பது பற்றி தான் பேசுவார்கள். அது போல் அண்ணாச்சியிடம் சுகர் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது, கதை கிடைக்காமல் திணறிக் கொண்டிருந்த இயக்குனர்கள் பேசாமல் இந்த சுகர் கதையை வைத்து ஒரு படத்தை இயக்கி விட்டால் என்ன என்று நினைத்து விட்டார்கள் போலும் என்றும், தமிழ்நாட்டில் சுகர் வந்தவர்கள் மட்டுமே இந்த கதையைப் பார்த்தால் 200 நாட்களுக்கு மேல் ஓடுமே என்று நினைத்து விட்டு இந்த கதையை எடுத்து விட்டார்கள் போல என்று கடுமையான விமர்சனங்களை அவர் முன் வைத்தார். அண்ணாச்சியை வைத்து சுகர் படம் எடுக்கிறேன் என்று சொல்லி, படம் பார்த்த அனைவருக்கும் பிபி வர வைத்தது தான் மிச்சம் என்றும் அவர் கூறினார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video…

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Tamil Talkies

விளம்பரம்

Leave a Comment