பிகில் லாபமா? நஷ்டமா? அர்ச்சனா கூறிய பதில்!

பிகில் லாபமா? நஷ்டமா? அர்ச்சனா கூறிய பதில்! 1

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளிவந்தது. இப்படம் வெற்றி பெற்றதா? இல்லையா என்று அதிக கேள்விகள் பலருக்கும் எழுந்த வண்ணம் உள்ளன. அதற்கு தற்போது அர்ச்சனா கல்பாத்தி பதிலளித்து இருக்கிறார்.

பிகில் படம் 180 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி முன்பே செய்தியாளர்களிடம் பேட்டி அளித்திருந்தார்.தற்போது படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் பிகில் உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமாக வசூலை அள்ளி சாதனை செய்துள்ளது என பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் வந்துள்ளது.

விளம்பரம்

இந்நிலையில் ஒரு பிரபல தனியார் தொலைகாட்சிக்கு அர்ச்சனா தற்போது பேட்டி அளித்துள்ளார். “படம் எங்களுக்கு லாபம் தான். நல்ல profit தான் கொடுத்து உள்ளது ” என்று அவர் கூறியுள்ளார்.

விளம்பரம்

Leave a Comment