தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக வந்தாலும், இன்று தனக்கென மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் நடிகர் சூர்யா. சிவகுமாரின் மகனான இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “நேருக்கு நேர்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் சில காலம் வெற்றிக்காக காத்திருந்த இவருக்கு பாலாவின் “நந்தா” படம் மிக பெரிய அளவில் காய் கொடுத்தது. அதற்கு முன் சில காமெடி , காதல் படங்கள் நடித்து இருந்தாலும் மக்கள் இவரை நந்தா படத்தின் மூலம் தான் ஒரு தனி நாயகனாக ஏற்று கொண்டனர். பின்னர் ஆறு, வேல், கஜினி, வாரணம் ஆயிரம், காக்க காக்க, ஜில்லுனு ஒரு காதல், சிங்கம் என வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து மாஸ் மசாலா படங்களை நடித்து கொஞ்சம் தோல்விகளை சந்தித்த சூர்யா, தன்னுடைய script selection-ஐ கொஞ்சம் மாற்ற துவங்கி கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். சூரரை போற்று, ஜெய் பீம், விக்ரமில் வந்த ரோலெக்ஸ், வெற்றிமாறனின் வாடிவாசல், பாலாவின் “வணங்கான்” என சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் நல்ல எதிர்பார்ப்பை கொண்டுள்ளது.

அந்த வகையில் நடிகர் சூர்யாவின் சூரரை போற்று படம் கொரோன காலகட்டத்தால் OTT தளத்தில் வெளியானாலும் மாபெரும் வெற்றியை பெற்றது. சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஊர்வசி, “பூ” ராமு முதலனோர் இந்த படத்தில் நடித்து இருந்தனர். சுதா கொங்கரா இயக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாள, ஹிந்தி மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இந்த படம் அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் பட்டியலில் 5 விருதுகளை தட்டி சென்றுள்ளது. அதாவது சிறந்த நாயகன், சிறந்த நாயகி, படத்திற்கு சிறந்த பின்னணி இசை அமைத்தற்காக ஜி.வி.பிரகாஷ் குமார், சிறந்த திரைக்கதை அமைத்தற்காக ஷாலினி உஷாதேவி மற்றும் சுதா கொங்கரா என விருதுகளை குவித்து அனைவரது பாராட்டுகளையும் குவித்துள்ளது.

இப்போது இந்த படத்திலிருந்து தமிழில் நீக்கப்பட்டு ஹிந்தியில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. குறிப்பாக படத்தில் நீக்கப்பட்டுள்ள இந்த காட்சி ஹிந்தியில் படம் ஒளிபரப்பட்ட தொலைக்காட்சியில் இடம் பெற, அதனை பகிர்ந்து வருகிறார்கள் ரசிகர்கள். சிறிய சண்டைகாட்சி இந்த பதிப்பில் இடம் பெற்றுள்ளது.
#SooraraiPottru Deleted Fight Scene 😮 pic.twitter.com/KlwUXQ42yU
— 𝗥𝗢𝗟𝗘𝗫 𝐒𝐀𝐍𝐃𝐄𝐄𝐏 (@Sandeep_M_S_) July 31, 2022