அஜித்தின் ஆஸ்தான இயக்குனரிடம் விஜயை கோர்த்துவிட்ட சன் பிக்சர்ஸ்..தளபதி 68 படம் குறித்த தகவலால் பீதியில் விஜய் ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவர் கடைசியாக நடித்த படம் பீஸ்ட். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியிருந்தார். படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை, வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்து இருந்தது. பீஸ்ட் திரைப்படத்தின் தோல்விக்குப் பின்னர், விஜய் ரசிகர்கள் நெல்சனை மீம்ஸ் போட்டு கலாய்த்து தள்ளி விட்டனர். நடிகர் விஜய்க்கும் இது பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. விஜய் தற்போது தளபதி தனது 66 ஆவது படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தெலுங்கு இயக்குனர் வம்சியால் இயக்கப்படுகிறது. இந்த படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

அஜித்தின் ஆஸ்தான இயக்குனரிடம் விஜயை கோர்த்துவிட்ட சன் பிக்சர்ஸ்..தளபதி 68 படம் குறித்த தகவலால் பீதியில் விஜய் ரசிகர்கள் 1

விளம்பரம்

இதற்காக விஜய் அடிக்கடி சென்னையில் இருந்து விமான மூலம் ஹைதராபாத் சென்று வருகிறார். இந்த படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் இருப்பதால், அடுத்ததாக அவர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து, தளபதி 67 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இடம் இது குறித்து கேட்டபோது, வாரிசு படப்பிடிப்புகள் முடிந்த பின்னர் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அறிவிப்புகள் வந்த பின்பு இது குறித்து அதிகார அறிவிப்பை வெளியிட இருப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் தளபதி 68 படத்தின் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருக்கிறது. அதில் மீண்டும் சன் பிக்சர்ஸ் உடன் இணைந்து இயக்குனர் சிறுத்தை சிவா உடன் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தொடர்புடையவை  சரிகா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.! நீண்ட நாளுக்கு பின் திரையில் ரீ என்ட்ரி கொடுத்த சரிகா.!

அஜித்தின் ஆஸ்தான இயக்குனரிடம் விஜயை கோர்த்துவிட்ட சன் பிக்சர்ஸ்..தளபதி 68 படம் குறித்த தகவலால் பீதியில் விஜய் ரசிகர்கள் 3

விளம்பரம்

 

 

விளம்பரம்

சமீப காலமாக சன் பிக்சர்ஸ் பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறது. ரஜினியின் அண்ணாத்த, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், விஜயின் பீஸ்ட் போன்ற படங்களை தயாரித்தது. ஆனால் எந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தற்போது தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் சிறுத்தை சிவா உடன் இணைந்து விஜய் தளபதி 68 படத்தில் நடிப்பார் என்ற தகவலால் விஜய் ரசிகர்கள் சற்று கலக்கமடைந்துள்ளனர். கார்த்திக் நடித்த ‘சிறுத்தை’ என்ற படத்தின் மூலமாக இயக்குனராக பிரபலமானார் சிவா. இதனால் அவர் சிறுத்தை சிவா என்று அழைக்கப்பட்டார். பின்னர் வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் என தொடர்ந்து அஜித் படங்களை இயக்கி அஜீத்தின் ஆஸ்தான இயக்குனர் ஆனார் சிவா. இவர் கடைசியாக ரஜினியை வைத்து இயக்கிய அண்ணாத்தே படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் இவர் இயக்கத்தில் விஜய் 68வது படத்தில் நடிப்பார் என்ற தகவலால் விஜய் ரசிகர்கள் சற்று கலக்கமடைந்துள்ளனர். அந்த செய்தியை நீங்களும் காண…Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Cineulagam

விளம்பரம்

Leave a Comment