தமிழ் சினிமாவின் தற்போதைய மிக முக்கிய வான்டட் இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான். இவருடைய முதல் படமான “மாநகரம்” படத்திலேயே மிக பெரிய வரவேற்பை பெற்றார். பின்னர் “கைதி”, இந்த படம் குறித்து மக்களுக்கு ஒருவர் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. கடந்த சில வருடங்களில் வெளியான மிக சிறப்பான அக்ஷன் படம் இது. அடுத்து தளபதியுடன் “மாஸ்டர்”. 2 வருட கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு வந்த திரையரங்கு உரிமையாளர்களை மீட்டெடுத்த பிளாக் பஸ்டர் படம் அது .

கடைசியாக வெளியான படம் “விக்ரம்”. ஒரு விருது விழாவில் தானை தானே கமலின் மிக பெரிய ரசிகன் என குறிப்பிட்ட லோகேஷ், இப்பொது கமலுக்கு மிக பெரிய வெற்றியை கொடுத்துள்ளார். கமல்ஹாசன், பாகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா என 4 பெரிய நாயகர்களுக்கு சரியான அளவில் ரோல் கொடுத்து அதற்கு ஏற்ப சரியான திரைக்கதை அமைத்து, இப்பொது தமிழ் படங்கள் எடுத்த அதிகபட்ச வசூலை அள்ளி குவித்துள்ளார்.

மாஸ்டர் படமும் மிக பெரிய வெற்றி என்பதால், அடுத்து இவர் விஜயுடன் இணையவுள்ள படத்தின் மீது மிக பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சொல்லப்போனால் விஜய் ரசிகர்களே எதிர்பார்க்கும் படமாக வாரிசை விட இது அதிக எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் கிட்டத்தட்ட படப்பிடிப்புக்கான வேலைகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இயக்குனர்களின் படங்களில் லோகேஷின் விக்ரம் 3, கைதி 2 ஆகிய படங்கள் தற்போது மிகவும் முன்னிலையில் இருக்கின்றன. விக்ரம், ரோலெக்ஸ், டில்லி, அமர், பிஜோய், அன்பு போன்ற கதாபாத்திரங்கள் நேரில் மோதிக்கொள்ள ரெடியாகும் இந்த படங்களை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் காத்து இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் தன்னுடைய ட்விட்டர் பதிவில் இப்பொது லோகேஷ் கனகராஜ் போஸ்ட் ஒன்று போட்டுள்ளார். தான் சிறுது காலம் சமூகவலைத்தளங்களில் இருந்து விலகி இருக்க போவதாகவும், விரைவில் தன்னுடைய அடுத்த படம் குறித்த அப்டேட் வெளிவரும் என்றும் தெறிவித்துள்ளார். அடுத்த படம் என்பது நடிகர் விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகும் படம் தான். இதில் நெகட்டிவ் கதாபத்திரத்தில் நடிக்க நடிகை சமந்தாவிடம் பேச்சுவார்த்தைகள் நடந்ததாக செய்திகள் வெளியாகின. அதே போல லோகேஷின் cinematic universe-இல் இப்பொது இடம் பெற்றுள்ள முக்கிய கதாபாத்திரமான அமர் விஜயின் அடுத்த படத்தில் இடம் பெரும் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த அமர் பாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகர் பகத் பாசில்.