1000 கோவில் கட்டுவதற்கு பதிலாக பள்ளிக்கூடம் கட்டுங்க.! சூரி பேச்சுக்கு கமெண்டில் கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட ஒருவரை படிக்க வைப்பது எவ்வளவோ மேல் என்றும், அது பல ஜென்மம் நம்மைப் பற்றி பேசும் என்றும் சூரி விருமன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். அவரது பேச்சுக்கு பலரும் தங்களது வரவேற்பை தெரிவித்து வருகின்றனர். சிலர் அவரது கருத்துக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இன்று மதுரையில் நடிகர் கார்த்திக் மற்றும் அதிதியின் நடிப்பில் உருவாகி இருக்கின்ற விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் இரண்டு பாடல்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் இன்று மாலை படத்தின் பாடல் வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீடு மதுரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

1000 கோவில் கட்டுவதற்கு பதிலாக பள்ளிக்கூடம் கட்டுங்க.! சூரி பேச்சுக்கு கமெண்டில் கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் 1

விளம்பரம்

சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் கார்த்தி உடன் இணைந்து இளவரசு, சிங்கம் புலி, பிரகாஷ்ராஜ், சூரி வடிவக்கரசி, மைனா நந்தினி, ரோபோ சங்கர் மகள் ஆகிய பலர் நடித்திருக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு வெளியான சித் ஸ்ரீராம் குரலில் இந்த படத்தில் வரும் கஞ்சா பூ கண்ணால மக்களிடையே மிகப் பிரபலமாக இருந்தது. இன்ஸ்டாகிராமில் பலரும் இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்திருந்தனர். இந்த நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் எகிறி இருந்த நிலையில் ட்ரைலர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி பேசியிருப்பது தற்போது பேசு பொருளாகியுள்ளது.

தொடர்புடையவை  அனுமதி இன்றி கிளிகள் வளர்த்த ரோபோ ஷங்கருக்கு லட்சக்கணக்கில் அபராதம்.! எவ்வளவு தெரியுமா?

1000 கோவில் கட்டுவதற்கு பதிலாக பள்ளிக்கூடம் கட்டுங்க.! சூரி பேச்சுக்கு கமெண்டில் கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் 3

விளம்பரம்

நடிகர் சூர்யாவின் குடும்பத்தை பொறுத்தவரை, அவர்கள் அகரம் அறக்கட்டளை என்ற நிறுவனத்தை தொடங்கி பலருக்கும் கல்வி வழங்கி வருகின்றனர். மேலும் நடிகர் கார்த்திக் விவசாயிக்கு விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சில அமைப்புகளையும் நடத்தி விவசாயிகளுக்கு நன்மைகள. செய்து வருகிறார். இதை மேற்கோள் காட்டி பேசிய சூரி, ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட ஒருவரை படிக்க வைப்பது பல ஜென்மத்திற்கும் பேசப்படும் என்று சூர்யாவை புகழ்ந்து பேசினார். இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சிலர் சூரியை பார்த்து நீங்கள் மதுரையில் ஹோட்டல் கட்டியதிற்கு பதிலாக ஒரு கல்விக்கூடம் கட்டி இருக்கலாமே? என்று பதிலடி கொடுத்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு ஒரு மேடையில் ஜோதிகா, இதே போன்ற கருத்தை பேசியிருந்தா.ர் கோவில்களுக்கு செலவழிப்பதை விட ஏழைகளுக்கும், மருத்துவமனைகள் போன்றவற்றிற்கும் செலவளியுங்கள் என்று ஜோதிகா கூறியிருந்தார். அப்போதே ஜோதிகாவை பலரும் விமர்சித்து பேசி இருந்தனர். தற்போது சூரியன் இந்த கருத்து மீண்டும் பேசு பொருளாகியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

YouTube video code embed credits: Thi Cinemas

விளம்பரம்

Leave a Comment