யுவனுடன் சேர்ந்து பாட்டு பாடி செம்ம Cute ஆக டான்ஸ் ஆடி, மேடையை அலறவிட்ட அதிதி.!

கொம்பன், மருது, புலிக்குத்தி பாண்டி, தேவராட்டம் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் முத்தையா. இவர் தற்போது கார்த்தி மற்றும் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஆகியோரை வைத்து எடுக்க இயக்கியுள்ள திரைப்படம் தான் விருமன். இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சூரி, கருணாஸ், சரண்யா பொன்வண்ணன், மைனா நந்தினி, வடிவுக்கரசி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் சொந்த நிறுவனமான 2d என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். கிராமத்துக் கதையை பின்னணியாக கொண்டு விருமன் எடுக்கப்பட்டுள்ளது. மதுரையை சுற்றி படமாக்கப்பட்டுள்ளது இந்த படத்தில் அதித்தி சங்கர் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் தைரியமான மதுரைக்கார பெண்ணாக நடித்து அசத்தியிருக்கிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

யுவனுடன் சேர்ந்து பாட்டு பாடி செம்ம Cute ஆக டான்ஸ் ஆடி, மேடையை அலறவிட்ட அதிதி.! 1

விளம்பரம்

சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தில் இருந்து கஞ்சா பூ கண்ணால என்ற பாட்டு வெளியாகி இருந்தது. இந்தப் பாடலை பலரும் நடனமாடி ரீல்ஸ் செய்து instagram-ல் பதிவேற்றி வந்தனர். பின்னர் இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரவீரன் என்ற பாடலும் வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று படத்தின் பாடல் வெளியீடு மற்றும் டிரைலர் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், மதுரையில் ராஜா முத்தையா மன்றத்தில் மாலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. படத்தின் ட்ரைலரும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பருத்திவீரன் படத்தைப் போலவே இருப்பதாகவும் சிலர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் நடந்தன. அந்த விழாவில் பேசிய அதிதி சங்கர் இந்த படத்திற்கு வாய்ப்பளித்த சூர்யா சாருக்கு நன்றி என்றும், நடிப்பு விஷயத்தில் அப்பாவின் தலையீடு இல்லாமல் நடித்திருப்பதாகவும், இனி அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருப்பதாகவும், கிராமத்து பெண்களை அழகு, கிராமத்து பெண்ணாக நடித்ததில் மகிழ்ச்சி என்றும் பேசினார்.

தொடர்புடையவை  வாரிசு 5 நாள் முடிவில் எத்தனை கோடி வசூல் தெரியுமா? அதிகார்பூர்வமாக அறிவித்த படக்குழு

யுவனுடன் சேர்ந்து பாட்டு பாடி செம்ம Cute ஆக டான்ஸ் ஆடி, மேடையை அலறவிட்ட அதிதி.! 3

விளம்பரம்

சுட்டித்தனங்கள் நிறைந்த பெண்ணாக இருக்கும் அதிதி, சூர்யா நிகழ்ச்சி அரங்கிற்கு வருவதற்கு முன்பாக ரசிகர்கள் ரோலக்ஸ் ரோலக்ஸ் என்று கத்திக் கொண்டிருக்கும்போது, அவரும் சேர்ந்து கத்திக் கொண்டிருந்தார். பின்னர் யுவன் சங்கர் ராஜாவுடன் மதுரவீரன் படத்தின் பாடலை பாடி ஒரு குத்தாட்டம் போட்டார். ஹீரோயினாக மட்டுமில்லாமல் ஒரு பாடகியாகவும் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் அதிதி சங்கர். விருமன் படத்திற்காக அதிதியும் யுவன் சங்கரும் ஏற்கனவே சேர்ந்து பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube video code embed credits: 2D Entertainment

விளம்பரம்

Leave a Comment