கவிஞர் சினேகன் சின்னத்திரை நடிகை ஜெயலெட்சுமி மீது காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற பாடலாசிரியர்களில் ஒருவர் தான் சினேகன். இவர் ராம் படத்தில் வரும் ஆராரிராரோ, பாண்டவர் பூமியில் வரும் தோழா தோழா போன்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பிரபலம். ஆனால் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது பிக்பாஸ் தான். பிக்பாஸுக்கு பின்னர் இவர் தமிழகம் முழுவதும் வெகுவாக அறியப்பட்டார். இவருக்கும் சின்னத்திரை நடிகை கன்னிகாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் இவரும் அவரது மனைவியும் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பதிவிடுவது வழக்கம். இவர்களை பின் தொடர்பவர்களும் மிக அதிகம். இவரும் கன்னிகாவும் ஒருவருக்கொருவர் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது இவர் சின்னத்திரை நடிகை ஜெயலெட்சுமி மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இவர் 2015ம் ஆண்டு சினேகம் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலம் பலருக்கும் உதவிகள் புரிந்து வருகிறார் சிநேகன். இந்த நிலையில் சினேகம் பவுண்டேஷன் பெயரை பயன்படுத்தி பலரும் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக சினேகனுக்கு தகவல் கிடைத்ததையடுத்து காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இது குறித்து அவர் தனிப்பட்ட முறையில் விசாரித்த போது விசாரித்தபோது, சினேகம் பவுண்டேஷன் பெயரை பயன்படுத்தி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பணவசலில் ஈடுபட்டு வந்துள்ளதாக சினேகனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் கடுமையாக அதிர்ச்சி அடைந்த சினேகன் தனது வழக்கறிஞர் மூலமாக அந்த போலியாக செயல்பட்டு வந்த தொண்டு நிறுவனத்திற்கு கடிதங்கள் அனுப்பியும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பேசியுள்ளார். அப்போது அவர்கள் சமாதானம் பேச வாருங்கள் என்று சினேகனை அழைத்துள்ளனர். இதனால் அவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.


அதில் அவர், தான் சொந்த செலவில் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும், தனது நிறுவனத்தின் பெயரை போலியாக பயன்படுத்தி பணவசூலில் ஈடுபட்டு வரும் பாஜக பிரமுகரும், சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சென்னை காவல் நிலையத்தில் புகாரை அளித்திருக்கிறார். இந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Video Embed Credits: Red Pix