அறிவு பொறுமையை இழந்துட்டான், ரொம்ப மன அழுத்ததுல இருக்கான்! மனம் திறந்து பேசிய பா.ரஞ்சித்

கடந்த ஒரு வாரமாக இணையளத்தை ஆக்கிரமித்துள்ள ஒரு செய்திதான் தெருக்குரல் அறிவு. இவர் கானா தமிழ் பாடல்களை ராப் பாடல்கள் போன்று பாடி புகழ் பெற்றவர் ஆவார். இவரின் பாடல்கள் எல்லாமே ஹிட் ஆகி விடுவது வழக்கம். இவரின் ஒரு படைப்பு தான் என்ஜாயி எஞ்சாமி. இவர் இந்தப் பாடலை ஆறு மாத காலமாக இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு எழுதி இருந்திருக்கிறார். இந்த பாடலை இவர் பாடகி தீயுடன் இணைந்து பாடி இருந்தார். இந்த பாடல் சுமார் 430 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த பாடலுக்கு தீயின் தந்தையும், இசையமைப்பாளருமான சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தா.ர் இந்த நிலையில் இந்தப் பாடலை பற்றிய சர்ச்சை ஒன்று தற்போது வெடித்து பூதாகரமாகி இருக்கிறது. அது குறித்து பேசி இருக்கும் இயக்குனர் பா ரஞ்சித் சில கருத்துக்களை முன் வைத்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

அறிவு பொறுமையை இழந்துட்டான், ரொம்ப மன அழுத்ததுல இருக்கான்! மனம் திறந்து பேசிய பா.ரஞ்சித் 1

விளம்பரம்

இந்த சர்ச்சை ஆரம்பமானது ஜூலை 28ஆம் தேதி ஆரம்பித்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சியில் இருந்துதான். இந்த நிகழ்ச்சியில் இந்த பாடலை பாடிய தீயும் அவருடம் இணைந்து கிடாக்குழி மாரியம்மாளுமே பாடினர். இந்தப் பாடலை எழுதி நடித்து பாடியும் இருந்த அறிவு ஏன் இடம்பெறவில்லை என்று பல நெட்டிசன்களும் கேள்வி எழுப்பினர். மேலும் தீயும், சந்தோஷ் நாராயணனும் அறிவை புறக்கணித்து விட்டதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் அதிர்ந்து போன தீ மற்றும் சந்தோஷ் நாராயணன் நாங்கள் எந்த இடத்திலுமே அறிவை புறக்கணிக்கவில்லை. அவர் வெளிநாட்டில் இருந்ததால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியிருந்தார்கள் என்று விளக்கம் அளித்திருந்தனர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த விக்னேஷ் சிவனும் இதே கருத்தை தான் கூறியிருந்தார். அவரை பலமுறை அழைத்தும் அவரால் நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என்று விக்னேஷ் சிவன் கூறியிருந்தார்.

தொடர்புடையவை  அறிவு, எப்பவும் நீ ஜெயிக்கணும்னு தான் நான் நினைக்கிறேன்.! நண்பனுக்காக மனம் உருகி பேசிய தீ

அறிவு பொறுமையை இழந்துட்டான், ரொம்ப மன அழுத்ததுல இருக்கான்! மனம் திறந்து பேசிய பா.ரஞ்சித் 3

விளம்பரம்

இந்த நிலையில் பா ரஞ்சித் தற்போது பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் அறிவு உண்மையிலேயே புறக்கணிக்கப்பட்டாரா என்று கேட்கப்படுகிறது. அதற்கு அறிவு விஷயத்தில் நிறைய சிக்கல்கள் உள்ளது. அறிவுக்கு ஏற்பட்ட மனஉளைச்சல்களை நான் அருகில் இருந்து பார்த்து இருக்கிறேன். அந்த மன உளைச்சல்களின் வெடிப்பு தான் அவர் தற்போது கூறியிருக்கும் கருத்து. அறிவு தனது பொறுமையை இழந்துவிட்டார், அவர் மிகவும் கஷ்டப்பட்டு இந்த பாடலை உருவாக்கி இருந்தார் ஆனால் அவர் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார் என்றும் அவர் பேசியிருக்கிறார். அறிவு தனது பொறுமையை இழந்து விட்டார் அவர் வாயை திறந்து பேசிய பின்பு தான் பல விஷயங்கள் தெரியவரும் என்றும் பா. ரஞ்சித் கூறியிருக்கிறார் அவரின் அந்த பேட்டியை நீங்களும் காண.. Watch the below video…

விளம்பரம்

Youtube video code embed credits: Aadhan Media

விளம்பரம்

Leave a Comment