மேடையில் திடீரென அய்யய்யோ அய்யய்யோ என கத்திய எடப்பாடி.! என்ன ஆச்சுன்னு தெரியுமா?

அதிமுகவில் நடந்த உட் கட்சி குழப்பங்கள் எல்லாம் முடிந்து, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று உள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியில் பல குழப்பங்கள் ஏற்பட்டு முடிந்துள்ளன. ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி, சசிகலா அணி என்று பல அணிகள் உருவாகி தற்போது அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. பெரும்பான்மையான தொண்டர்களும் நிர்வாகிகளும் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், இபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வந்தனர். ஆனால் இந்த இரட்டைத் தலைமை திட்டம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை. இரண்டு தலைவர்கள் முடிவெடுப்பது குழப்பத்தை விளைவிப்பதாக அவர்கள் கருதினர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

மேடையில் திடீரென அய்யய்யோ அய்யய்யோ என கத்திய எடப்பாடி.! என்ன ஆச்சுன்னு தெரியுமா? 1

விளம்பரம்

இதனால் இரண்டு பதவிகளையும் ஒழித்து விட்டு, ஜெயலலிதா வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியை மட்டும் வைத்துக்கொள்ள எடப்பாடி பழனிச்சாமி திட்டம் தீட்டி பொதுக்குழுவில் அந்த கோஷத்தை எழுப்பினார். ஓபிஎஸ்க்கு பெரும்பான்மையான ஆதரவு கிடைக்காத நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபித்து இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டார். அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்ற கட்சி விதியை திருத்தி, தற்போது எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆகியுள்ளார். இவருக்கு மக்கள் மத்தியிலும், கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் செல்வாக்கு அதிகரித்துள்ளது. ஜெயலலிதா இறந்த பின்பு நான்கரை் ஆண்டுகள் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றிய எடப்பாடி தான் தலைமை பதவிக்கு சரியானவர் என்ற எண்ணத்திற்கு அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் வந்து விட்டனர்.

தொடர்புடையவை  வேலை இல்லை என்று சொல்லி பிரசன்னாவை பிரிகிறாரா சினேகா? ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

மேடையில் திடீரென அய்யய்யோ அய்யய்யோ என கத்திய எடப்பாடி.! என்ன ஆச்சுன்னு தெரியுமா? 3

விளம்பரம்

தற்போது இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி ஊர் ஊராக சென்று தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். நான்கு மாதங்களில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தி அதில் வெற்றி பெற்று பொதுச்செயலாளராக முடி சூட்ட இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதற்கு முன்னோட்டமாக தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று சென்ற பழனிச்சாமி தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவருக்கு ஒரு தொண்டர் சால்வை போட வந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் இழுத்து விட, அவர் மேடையில் இருந்து கீழே விழப் போனார்.்அதை பார்த்த எடப்பாடி பழனிச்சாமி பதறிப்போய் ‘அய்யய்யோ, அய்யய்யோ’ என்று அவரை பிடிக்க கையை நீட்டுகிறார். அதற்குள் அவரை பிடித்து நிர்வாகிகள் கீழே விழாமல் பார்த்துக் கொள்கின்றனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் எடப்பாடி பழனிச்சாமி ஒரு எதார்த்தமான தலைவராக இருக்கிறார், அமைதியான தலைவராக இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண…Watch the below video…

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Thanthi Tv

விளம்பரம்

Leave a Comment