நடனத்தில் பின்னி எடுக்கும் மைனா.! மேகம் கருக்காதா பாடலுக்கு செம்ம Cute ஆக ஆடிய மைனா யோகி

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மைனா என்ற கதாபாத்திரம் மூலமாக அறிமுகமானவர் நந்தினி. இவரை நந்தினி என்று கூறுவதை விட மைனா என்று கூறினால்தான் அனைவருக்கும் தெரியும். திரையுலகிலும் சரி, சின்னத்திரையிலும் சரி, பெண் காமெடியாளர்கள் மிகவும் குறைவு. அப்படியே அவர்கள் வந்தாலும் மிகவும் கஷ்டப்பட்டு வரவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. ஆனால் தனது எதார்த்தமான காமெடியால் பலரையும் சிரிக்க வைத்து கொண்டிருப்பவர் மைனா. இவர் சினிமாவில் பல வாய்ப்புகள் தேடியும் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரைக்குள் நுழைந்தார். சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ததால் அவருக்கு அடுத்தடுத்த நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. மேலும் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்து வருகிறது. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராகவும் அவர் நடித்துள்ளார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

நடனத்தில் பின்னி எடுக்கும் மைனா.! மேகம் கருக்காதா பாடலுக்கு செம்ம Cute ஆக ஆடிய மைனா யோகி 1

விளம்பரம்

தற்போது கார்த்திக் நடிக்கும் விருமன் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு முதலில் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. அந்த கணவர் தற்கொலை செய்து கொண்டு இறந்ததால் இவர் இரண்டாவதாக யோகி என்ற ஒருவரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். மைனாவும், அவரது கணவர் யோகியும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பின்னர் மிகவும் பிரபலமாகினர். சின்னத்திரையில் மக்களுக்கு பிடித்த ஜோடியாகவும் மாறிப் போயினர். சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் மைனா ஒரு யூடியூப் சேனலையும் தொடங்கி அப்போது வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். மேலும் கணவருடன் இணைந்து இவர் instagram ரீல்ஸ் செய்து அவ்வபோது பதிவேற்றி வருகிறார். இவருடைய வீடியோக்களை பல லட்சம் மக்கள் பார்ப்பது உண்டு.

தொடர்புடையவை  குஷி படத்தில் வரும் ஜோதிகா, விஜய் போலவே மேகம் கருக்குது பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட தாமரை & பார்த்தி

நடனத்தில் பின்னி எடுக்கும் மைனா.! மேகம் கருக்காதா பாடலுக்கு செம்ம Cute ஆக ஆடிய மைனா யோகி 3

விளம்பரம்

அந்த வகையில் தற்போது மைனா நந்தினி ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் திருச்சிற்றம்பலத்தில் வரும் மேகம் கருக்காத பாடலுக்கு தனது கணவருடன் இணைந்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனுஷ் நித்தியா மேனன் போலவே செம க்யூட்டாக ஆடி இருக்கிறார் மைனாவும் அவரது கணவரும். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்

Leave a Comment