திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் இயக்குனர் விக்னேஷ் சிவன், இவர் நடிகை நயன்தாராவின் காதலரும், கணவனும் ஆவார். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘போடா போடி’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக திரைத்துறையில் அடி எடுத்து வைத்தார். பின்னர் ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தின் போதுதான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. பின்பு சூர்யாவை வைத்து ‘தானா சேர்ந்த கூட்டம்’, பாவ கதைகளில் ‘லவ் பண்ணா விட்ரனும்’, சமந்தா, நயன்தாரா, விஜய் சேதுபதியை வைத்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்று பல படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் இவர் வேலையில்லா பட்டதாரி போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அஜித்தை வைத்து ஏகே62 என்ற படத்தையும் இயக்க இருக்கிறார் விக்னேஷ் சிவன். இயக்கம் மட்டுமின்றி கதை எழுதுவது, பாடல் எழுதுவது, படங்கள் தயாரிப்பது என்று பன்முகத் திறமையாளராக இருக்கிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இந்த நிலையில் இவருக்கு கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி நயன்தாராவுடன் சென்னை மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் நயன்தாரா ஜவான் என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். அதே நேரம் விக்னேஷ் சிவனுக்கு 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை அவர் சிறப்பாக செய்து முடித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டியானது பல நாடுகள் பங்கேற்ற ஒரு மிப்பெரிய நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியின் துவக்க விழாவையும், இறுதி விழாவையும் மிகச் சிறப்பாக, பிரம்மாண்டமாக, வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் விக்னேஷ் சிவன். இதற்காக பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். இந்த துவக்க விழாவிலும், இறுதி விழாவிலும் தமிழர்களின் பெருமையை உலகறிய செய்யும் நிகழ்ச்சிகளும், காணொளிகளும் ஒளிபரப்பப்பட்டது.

அந்த நிகழ்ச்சியை வடிவமைத்த விக்னேஷ் சிவன், பின்னணி குரல் கொடுப்பதற்காக உலக நாயகன் கமலஹாசனை தேர்வு செய்தார். கமலஹாசன் குரலில் தமிழர்களின் பெருமை பின்னணியில் ஒலிக்கப்படும்போது அது கம்பீரமாக இருக்கும் என்று எண்ணி அவரை பேச வைத்தார். இந்த வசனத்தையும் கமலஹாசனுடன் இணைந்து விக்னேஷ் சிவனே எழுதியிருக்கிறார், கமல் டப்பிங் பேசும் வீடியோவை விக்னேஷ் சிவன் தற்போது வெளியிட்டு இருக்கிறார். பிழையில்லாமல் கம்பீரமாக கமலஹாசன் நேரலையில் டப்பிங் பேசும் அந்த வீடியோவை விக்னேஷ் சிவன் பார்த்து வியந்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண…Watch the below video..