விஜய் 6 வயதாக இருக்கும் பொழுது அவரது தாய் சோபாவை தான் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக நடிகர் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் பேசியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எஸ் ஏ சந்திரசேகர், “யார் இந்த எஸ்ஏசி” என்ற பெயரில் ஒரு youtube சேனலை நடத்தி வருகிறார். அதில் தான் இந்த சினிமா துறையில் எவ்வாறு கடந்து வந்தேன் என்று வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவரது திருமணம் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என்று பல திறமைகளை கொண்டவர் தான் எஸ் ஏ சந்திரசேகர். இவர் 1981 ஆம் ஆண்டு சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு கன்னடம் என்று பல மொழிகளில் அவர் படங்களை இயக்கியிருக்கிறார்.

அவர் விஜயகாந்தை வைத்து மட்டுமே 19 படங்கள் இயக்கி இருக்கிறார். தனது மகன் விஜயை வைத்து 9 படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது நான் கடவுள் இல்லை என்ற படத்தையும் இயக்கி வருகிறார். மேலும் தனுஷ் நடித்த கொடி படத்திலும், சிம்பு நடித்த மாநாடு படத்திலும் நடித்து அசத்தியிருக்கிறார் எஸ் ஏ சந்திரசேகர். தற்போது எஸ்ஏ சந்திரசேகருக்கும் விஜய்க்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. எஸ்ஏசிஎம் விஜய்யும் பேசிக் கொள்வதில்லை விஜய் ரசிகர் மன்றத்தை நிர்வகிக்கும் பிரச்சனையில் அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல்கள் வெளியானது. சமீபத்தில் எஸ்ஏசியின் பிறந்தநாளின் போது விஜய் கலந்து கொள்ளாதது குறித்து அவரிடம் எஸ்ஏசி இடம் கேட்டபோது, விஜய்க்கு ஷூட்டிங் இருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை என்றும், விஜய் மக்கள் மன்றத்தில் பணம் கொடுத்தால் பதவி கொடுக்கிறார்கள் என்று வெளிப்படையாக பேசி தனக்கும் விஜய்க்கும் உள்ள பிரச்சினையை உறுதி செய்தார் எஸ்ஏசி.

இந்த நிலையில் அவர் youtube சேனலில் விஜயின் தாய் சோபாவை திருமணம் செய்தது பற்றி பேசி இருக்கிறார். அதில் நான் கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவன், சோபா இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர், சிவாஜியின் மனைவி கமலா தான் தாலி எடுத்துக் கொடுத்து திருமணம் செய்து கொண்டோம். அதன்பின்னர் சர்ச்சுக்கு போவோம், எல்லா கோவிலுக்கும் போவோம், திருப்பதி வேளாங்கண்ணிக்கு போய் மொட்டை போடுவோம் எந்த மதத்தையும் சாராமல் நாங்கள் இருவரும் வாழ்ந்து வந்தோம், பிறகு ஒரு நாள் இருவரும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாமா என்று ஷோபா என்னிடம் கேட்டார், ஒருநாள் கூட நீ கிறிஸ்டியனாக மாறிவிடு என்று சோபாவை நான் சொன்னது கிடையாது, நாம் இருவரும் வெவ்வேறு படகில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம்.

அதில் பெரிய அலையோ அல்லது சுழலோ வந்தால் இருவரும் ஒரே இடத்தில் கரை ஒதுங்க முடியாது வெவ்வேறு திசையில் இருப்போம் என சோபா சொன்னார். அதில் ஆயிரம் அர்த்தம் இருந்தது, எனவே தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததாகவும், இந்த திருமணத்திற்கு நடிகர் விஜய் தான் சாட்சி, அப்பொழுது அவருக்கு ஆறு வயதுதான் இருக்கும், கிறிஸ்தவ முறைப்படி நாங்கள் திருமணம் செய்து கொண்ட போது என்னுடைய தந்தை கூட வரவில்லை, நுங்கம்பாக்கம் சர்ச்சில் வைத்து 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணத்திற்கு விஜய் தான் சாட்சி. தற்போது விஜய் யாரிடம் வேண்டுமானாலும் பெருமையாக சொல்லலாம் என்னுடைய அப்பா அம்மாவின் திருமணம் என்னுடைய தலைமை தான் நடந்தது என்று, மேலும் இரண்டாவது முறையாக திருமணம் நடந்தபோது ஷோபா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார் என்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது பேட்டியில் பேசினார். விஜய்க்கு இரண்டாவதாக ஒரு தங்கை பிறந்து சிறிது காலத்திலேயே இறந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. Watch the below video…
Youtube Video Code Embed Credits: yaar indha SAC