விருமன் படத்தால் இரண்டே வாரத்தில் தூக்கி எறியப்பட்ட தி லெஜெண்ட் படம்..ஆனாலும் வசூல் எவ்வளவு தெரியுமா?

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான அண்ணாச்சி நடிப்பில், சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் தான் தி லெஜன்ட். இந்த படம் இரண்டு வாரங்கள் போட்டியே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த நிலையில், தற்போது இந்த படம் அனைத்து தியேட்டர்களிலிருந்தும் தூக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் என்று கார்த்தி நடிப்பில் வெளியாகியிருக்கும் விருமன் படம் தான். விருமன் படத்திற்காக அண்ணாச்சி நடித்த படங்களை அனைத்து தியேட்டர்களும் தூக்கி இருக்கிறார்ள், ஆனாலும் வசூலில் அண்ணாச்சி டாப் கியரில் இருக்கிறார். 1973 ஆம் ஆண்டு சென்னை தி நகர் பகுதியில் ஒரு சிறிய பாத்திரக்கடையாக ஆரம்பித்தவர் செல்வரத்தினம். இவர்களது கடுமையான உழைப்பால் என்று தி நகர் என்றாலே சரவணா ஸ்டோர்ஸ் என்று சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய சாம்ராஜ்யமாக வளர்ந்துள்ளது. செல்வரத்தினத்தின் மகன்தான் அருள் சரவணன்.

விருமன் படத்தால் இரண்டே வாரத்தில் தூக்கி எறியப்பட்ட தி லெஜெண்ட் படம்..ஆனாலும் வசூல் எவ்வளவு தெரியுமா? 1

விளம்பரம்

மாடல் துறையில் உள்ளவர்களை வைத்து ஏன் விளம்பரம் எடுக்க வேண்டும்? நம் கடை விளம்பரத்தில் நாமே நடித்தால் என்ன? என்று தன்னுடைய கடை விளம்பரங்களில் முதலில் நடிக்க தொடங்கினார் அருள் சரவணன். பின்னர் அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வரவே, சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன் என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தனது கடையின் விளம்பர படங்களை இயக்கிக் கொண்டிருந்த ஜேடி-ஜெர்ரி என்ற இருவரை வைத்து இந்த லெஜெண்ட் படத்தை எடுத்தார். இந்த படம் உலகம் எங்கிலும் 1200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் தமிழ்,,ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா மூவியாக வெளியானது. படத்திற்கு ஆரம்பத்தில் பல விமர்சனங்கள் இருந்தாலும் போகப் போக நல்ல வரவேற்பு இருந்தது. இது ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ந்திருந்தது என்றே கூற வேண்டும். குடும்பம் குடும்பமாக சென்று அண்ணாச்சியின் படத்தை பார்த்தனர்.

தொடர்புடையவை  வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்சன்..!சத்தமில்லாமல் நடந்த நிச்சயதார்த்தம்..!

விருமன் படத்தால் இரண்டே வாரத்தில் தூக்கி எறியப்பட்ட தி லெஜெண்ட் படம்..ஆனாலும் வசூல் எவ்வளவு தெரியுமா? 3

விளம்பரம்

மேலும் சில பைனான்சியர்களின் வீட்டில் ஐடி ரைடு நடந்து கொண்டிருந்ததால், பல படங்கள் வெளியியாவதில் சிக்கல் இருந்தது. எனவே அண்ணாச்சியின் படம் போட்டியே இல்லாமல் இரண்டு வாரங்கள் ஓடியது. சுமார் 40 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் இரண்டு வாரங்களில் 12.5 கோடி வசூலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஒரு அறிமுக நடிகர், புதுமுக நடிகரின் படம் இவ்வளவு வசூலை குவித்துள்ளது என்று சொன்னால் அது அண்ணாச்சியின் சாதனைதான். மேலும் தனக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த அருள் சரவணன் தற்பொழுது அடுத்த பயணத்திற்கு தயாராகி வருகிறார். நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புவதாக அவர் கூறியிருந்தார். அந்த அடிப்படையில் சில இயக்குனர்களிடம் அவர் கதை கேட்டு வருவதாகவும், கூடிய விரைவில் அவருடைய புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

Leave a Comment