பிரபல நடிகர் சிவகுமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி, பருத்தி வீரன் என்ற படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகம் ஆனார். வெளிநாட்டில் படித்து இருந்த போதிலும், திரைத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திரைத்துறைக்கு வந்தார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கார்த்தி. இவர் வேஷ்டி கட்டி கிராமத்து கெட்டப்பில் நடித்த படங்கள் எல்லாமே பெரிய வெற்றி பெற்றுள்ளது. அதே போல தற்போது விருமன் என்ற படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார் கார்த்தி. இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கியிருக்கிறார் இந்த படத்தை கார்த்தி அண்ணனான சூர்யாவை மற்றும் ஜோதிகாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தயாரித்திருக்கிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ஏற்கனவே முத்தையாவுடன் இணைந்து கொம்பன் படத்தில் நடித்திருந்தார் கார்த்தி. தற்போது இரண்டாவது முறையாக அதே இயக்குனருடன் இணைந்து விருமன் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் நேற்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இதில் கார்த்திக் ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி அறிமுகம் ஆகி இருந்தார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. பலர் படம் மிக நன்றாக இருந்ததாக கூறினர். பலர் இரண்டாவது பாகம் மிக மெதுவாக சென்றதாக கூறினர். இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் யூனிவர்ஸ் என்பது போல இந்த படம் முத்தையா சினிமாட்டிக் யூனிவர்ஸ், முத்தையா எடுத்த எல்லா படங்களும் ஒரே மாதிரி இருக்கும், ஹீரோவை ரொம்ப நல்லவனாக, பலசாலியாக காட்டுகிறார்கள், ஹீரோயின் குறும்புத்தனம் பண்ணுவதாக கிறுக்குத்தனம் பண்ணிட்டு இருக்கு, எடுத்த படத்தையே எடுத்து அரைச்ச மாவையே அரைச்சு, புளிச்ச மாவு ஆக்கிட்டாங்க, பெண்கள் எங்களுக்கு புளிச்ச மாவு பிடிக்கும் என்று சொல்லி இந்த மாதிரி படங்களை தவறாமல் பார்த்துவிடுகிறார்கள், அதனால் வசூலையும் குவித்து விடுகிறது. படத்துல வர ஒரு கதாபாத்திரமும் சரியாக எழுதப்படவில்லை, இந்த படமும் வேஸ்ட், இந்த படத்துக்கு பண்ண விமர்சனமும் வேஸ்ட் என்று ப்ளூ சட்டை மாறன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..
YouTube Video Code Embed Credits: Tamil Talkies