தெற்கு சாண்ட்விச் தீவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3-ஆக பதிவு!!

தெற்கு சாண்ட்விச் தீவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3-ஆக பதிவு!! 1

தெற்கு சாண்ட்விச் தீவில் கடுமையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அட்லாண்டிக் கடலிற்கு தென்பகுதியில் அமைந்துள்ள தெற்கு சாண்ட்விச் தீவின் கிழக்கு பகுதியில் இன்று அதிகாலை 2.22 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தெற்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டரில் 6.3 ஆக பதிவாகி இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் சாலையில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டபோது அதிர்வை உணர்ந்த மக்கள் பலரும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து சாலையில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தில் வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

விளம்பரம்

நிலநடுக்கத்தை தொடர்ந்து மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. தற்போது நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment