ஆசையாக வாங்கிய பிறந்தநாள் டிரஸ்..செல்ல மகளுக்கு அம்மா கொடுத்த அன்பு பரிசு..கண்கலங்க வைக்கும் பதிவு

நம் நாட்டில் பல மர்ம மரணங்கள் நடந்து வருகின்றன. இந்த மரணங்களின் பின்னணி குறித்து தெரியாமல் அந்த மரணங்கள் அப்படியே மண்ணுக்குள் புதைக்கப்பட்டு விடுகின்றன. அப்படி மண்ணுக்குள் புதைந்து விட்ட ஒரு சிறுமி தான் கடலூர் நெசலூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி. இவர் கடலூரில் இருந்து கள்ளக்குறிச்சி தனியார் பகுதியில் அமைந்துள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜூலை 13ஆம் தேதி அதிகாலை அவர்களது பெற்றோருக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில் உங்கள் மகள் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்று கூற, அந்த செய்தியை கேட்டு துடிதுடித்து போயினர் அந்த பெற்றோர்கள். அவர்கள் பள்ளிக்கு வருவதற்குள் உடலை பிரேத பரிசோதனை நிலையத்தில் போட்டுவிட்டு பள்ளி நிர்வாகிகள் கிளம்பிவிட்டனர். உள்ளே சென்று பார்த்த மாணவியரின் தாயாருக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது. அதில் மகளின் பின் மண்டை மட்டும் உடைந்து ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்ததாகவும், உடலில் நெஞ்சு மற்றும் வயிறு பகுதிகளில் கீறல்கள் இருந்ததாகவும், கைகளை இறுக்கி மூடிய நிலையில் இருந்ததாகவும் பள்ளி சீருடை திருப்பி அணிந்திருந்ததாகவும் பல குற்றச்சாட்டுகள் அவரது தாயாரால் முன்வைக்கப்பட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆசையாக வாங்கிய பிறந்தநாள் டிரஸ்..செல்ல மகளுக்கு அம்மா கொடுத்த அன்பு பரிசு..கண்கலங்க வைக்கும் பதிவு 1

விளம்பரம்

 

தொடர்புடையவை  அந்த சம்பவத்துக்கு அப்புறம் எனக்கு எந்த வாய்ப்பும் வரல.! கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட கூல் சுரேஷ்

இந்த செய்திகளை ஸ்ரீமதியின் தாயார் தொடர்ந்து வீடியோக்களாக வெளியிட்டு வந்தார். மேலும் பள்ளியின் வாசல் முன்பு தனது உறவினர்கள் சிலருடன் அவர் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடி வந்தார். ஒரு கட்டத்தில் இந்த செய்தி ஊர் முழுவதும் பரவ, பலர் போராட்டத்திற்கு கூட ஆரம்பித்தனர். ஆனால் கூட்டத்தில் பல விஷமிகள் புகுந்து அமைதியாக நடந்து கொண்டிருந்த போராட்டத்தை கலவரமாக மாற்றினர்.
பள்ளிக்கூடத்தை அடித்து நொறுக்கினர். பள்ளிக்கு சொந்தமான 50 பேருந்துகளை தீயிட்டு கொளுத்தினர். படிக்கும் மாணவர்களின் சான்றிதழ் உட்பட அனைத்தும் எரிந்து தீக்கிரையானது. இந்த போராட்டத்தை திட்டமிட்டு கலவரமாக மாற்றிய விஷமிகளை whatsapp குழு மூலம் கண்டுபிடித்து தொடர்ந்து கைது செய்து வருகிறது காவல்துறை. இந்த நிலையில் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தமிழக அரசு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. தற்போது இந்த பள்ளியின் உரிமையாளர், தாளாளர், 2 ஆசிரியர்கள், ஹாஸ்டல் வார்டன் என மொத்தம் ஐந்து பேரை கைது செய்து சிபிசிஐடி விசாரணை நடந்து வருகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  52 வயசானாலும் கு ம் மு னு இருக்க.! அசிங்கமாக வந்த மெசேஜ்.! விட்டு விளாசிய ஐஸ்வர்யா..!

ஆசையாக வாங்கிய பிறந்தநாள் டிரஸ்..செல்ல மகளுக்கு அம்மா கொடுத்த அன்பு பரிசு..கண்கலங்க வைக்கும் பதிவு 3

ஆனால் மாணவியின் மரணத்தில் உள்ள மர்மம் விலகாமலேயே 11 நாள் போராட்டத்திற்குப் பிறகு மாணவியின் முதல் புதைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் 12ஆம் தேதி ஸ்ரீமதியின் பிறந்தநாள் ஆகும். அவரின் பிறந்த நாளுக்காக ஒரு மாதத்திற்கு முன்பாகவே அவரது தாயார் புதிய துணிகளை எடுத்து வைத்திருந்தார். அதை நேற்று அவரது நினைவிடத்திற்கு சென்ற அவர் அவரது கல்லறை மீது போர்த்தி கதறி அழுதார். பின்னர் யாரோ ஒருவர் ஸ்ரீமதியின் பிறந்த நாளுக்காக பரிசு ஒன்றை அனுப்பி இருக்கிறார்கள். அந்த பரிசை பிரித்து பார்த்தபோது ஸ்ரீமதியின் தாயார் கதறி அழுதார். மேலும் ஸ்ரீமதியின் பிறந்தநாளில் அவர் ஒவ்வொரு வீட்டிலும் பூவாகவும், கனியாகவும், ஒவ்வொருவர் வீட்டு வாசலிலும் இருக்க வேண்டும் என்பதற்காக கனிகள் வளரும் பூச்செடிகளையும், 2000 தேக்கு மரங்களையும் ஒவ்வொரு வீடாக சென்று வழங்கி அதை வளர்க்குமாறு அவரது பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்தனர். பிறந்த நாளை கொண்டாட வேண்டிய ஸ்ரீமதி இன்று நம்மிடையே இல்லை என்ற வருத்தத்தால் பெரிய நெசலூர் கிராமமே சோகத்தில் மூழ்கிக் கிடந்தது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்

 

விளம்பரம்
தொடர்புடையவை  சூயஸ் நிறுவனம் குடிநீர் விநியோக உரிமையை ரத்து செய்யக் கோரி திமுக போராட்டம்

YouTube Video Code Embed Credits: Tamil Platform

விளம்பரம்

Leave a Comment