சின்னத்திரையில் பல நட்சத்திர ஜோடிகள் இருக்கிறார்கள். அப்படி ஒரு ஜோடியாக இருந்து, தற்போது பிரிந்து வாழ்ந்து வரும் ஜோடிகளில் ஒருவர்தான் தினேஷ் மற்றும் ரக்ஷிதா மகாலட்சுமி. ரக்ஷிதா சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலமாக புகழ்பெற்றவர். ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற நாடகத்தில் தான் அறிமுகமானார். அந்த நாடகத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததால் இவருக்கு அடுத்தடுத்து நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் சரவணன் மீனாட்சி சீரியல் என்ற மிக வெற்றிகரமான சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் விஜய் டிவி சீரியலில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து வந்தார். இதில் இவர் மகா என்கிற கேரக்டரில் நடித்து வந்தார். தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்று விஜய் டிவியில் இருந்து விலகி விட்டார்.

இப்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சில் ஒரு நாடகத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அதற்கான ப்ரோமோக்களும் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இவரது கணவர் தினேஷ் .தினேஷும், ரக்ஷிதா மகாலட்சுமியும் இணைந்து ஒரு நாடகத்தில் கூட நடித்திருக்கின்றனர். நன்றாக போய்க் கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் திடீரென ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டது. இருவரும் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். திருமணமாகி 9 ஆண்டுகளை கடந்து விட்ட பொழுதும், அவர்களுக்கு குழந்தை இல்லை என்ற காரணத்தால்தான் பிரிந்து விட்டார்கள் என்று சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் ஒரு பேட்டியின்போது அதை மறுத்து பேசிய தினேஷ், காலம் ஒருநாள் எல்லாவற்றையும் மாற்றும் என கூறியிருந்தார். தனக்கும் ரக்ஷிதாவிற்கும் பெரிய சண்டை எதுவுமில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தினேஷுக்கு நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தான் அவரை ரக்ஷிதா பிரிந்ததாக வந்த செய்தி வைரல் ஆனது. தற்போது ரக்ஷிதாவின் கணவர் தினேஷுக்கு புதிதாக ஒரு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் சன் டிவியில் லிவிங்ஸ்டன் மகளுடன் இணைந்து புதிதாக ஒரு சீரியலில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். தனது கணவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சொல்லி பிரிந்து வாழ்ந்து வரும் ரக்ஷிதாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சன் டிவி சீரியலில் கமிட் ஆகி இருக்கும் தினேஷிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
