சினிமான்னா என்னனே தெரியாதவன் எடுத்த படம் மாதிரி இருக்கு – தமிழ் ராக்கர்ஸ் படத்தை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை

நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள வெப்சீரிஸ் தான் தமிழ் ராக்கர்ஸ். இந்த தொடரை ஈரம், குற்றம் 23 ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அறிவழகன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மனோஜ் குமார் கலைவாணன் இந்த படத்தை எழுதியுள்ளார். ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இது ஒரு வெப் சீரிஸ் ஆக சோனி ஓடிடி தளத்தில் நேற்று (ஆகஸ்ட் 19) வெளியாகியுள்ளது. தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம் எவ்வாறு முறைகேடாக திரைப்படங்களை பதிவிறக்கம் செய்து வெளியிடுகின்றனர் என்றும், அதனால் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் இழப்புகள் பற்றியும், அந்த குற்றத்தை கதாநாயகன் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது பற்றிய படம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சினிமான்னா என்னனே தெரியாதவன் எடுத்த படம் மாதிரி இருக்கு - தமிழ் ராக்கர்ஸ் படத்தை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை 1

விளம்பரம்

படத்தின் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவருமே தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரை கேட்டாலே பயந்து ஓடுவார்கள். ஏனென்றால் சில வருடங்களுக்கு முன்பு தொடங்கி இன்று வரை படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்போ அல்லது வெளியான அன்றோ முதல் காட்சியை அப்படியே படம் எடுத்து தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இது குறித்து தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், நடிகர்கள் என அனைவரும் தமிழ் ராக்கர்ஸ் மீது புகார் அளித்தும் இன்று வரை தமிழ் ராக்கர்ஸ் என்றால் யார்? அவர்கள் எத்தனை பேர்? குழுவாக இயங்குகிறார்களா? அல்லது தனியாக இயங்குகிறார்களா? என்பது இன்று வரை தெரியவில்லை.

தொடர்புடையவை  நிலவை கொண்டு வா பாடலை வைத்து உன்னிகிருஷ்ணனை மரணமாக கலாய்த்த யூடியூப் சேனல்..உன்னி என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க.!

சினிமான்னா என்னனே தெரியாதவன் எடுத்த படம் மாதிரி இருக்கு - தமிழ் ராக்கர்ஸ் படத்தை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை 3

விளம்பரம்

இந்த நிலையில் ப்ளூசட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்துள்ளார். இவர்கள் தமிழ் ராக்கர்ஸ் கும்பலை பிடிப்பார்கள் என்று பார்த்தால், பழிக்கு பழிக்கு வாங்கும் கதையை எடுத்து வைத்து இருப்பதாகவும், சினிமா என்றால் என்ன என்றே தெரியாதவன் எடுத்த படம் மாதிரி இது இருப்பதாகவும் கூறினார். இந்த படம் தமிழ் ராக்கர்ஸ் கும்பலை ஒழிக்க எடுத்தது போல இல்லை, தமிழ் ராக்கர்ஸ் படும் கஷ்டங்களை விளக்குவது போல இருப்பதாக ப்ளூ சட்டை கடுமையாக விமர்சித்தார். இறுதியாக சோகம் என்னவென்றால் தமிழ் ராக்கர்ஸை ஒழிக்கிறேன் என்று சொல்லி எடுத்த படமும் இறுதியில் தமிழ் ராக்கர்ஸில் வந்து விட்டது என்று ப்ளூ சட்டை கலாய்த்து தள்ளினார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Tamil Talkies

விளம்பரம்

Leave a Comment