தமிழில் உள்ள நட்சத்திர ஜோடிகளில் ஒருவரும், நமக்கு பிடித்தமான ஜோடிகள் தான் ராதிகா – சரத்குமார். தற்போது ராதிகாவின் பிறந்தநாளை சென்னையில் கேக் வெட்டி கொண்டாடி இருக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பெயரளாகியுள்ளது. நடிகர் ராதிகா நடிகவேள் எம் ஆர் ராதாவின் மகள் ஆவார். இவர் 1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ராதிகா இலங்கையில் பிறந்து வளர்ந்தவர். இவருக்கும் சரத்குமாருக்கும் கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணமானது. இவர்களுக்கு ராகுல் என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள். ராதிகாவிற்கு ஏற்கனவே மலையாள நடிகரான பிரதாப் போத்தனுடனும், ஆங்கிலேயர் ஒருவருடனும் திருமணமாகி விவாகரத்து ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ராதிகா தற்போது தனது 60வது பிறந்தநாளை வெகு சிறப்பாக சென்னையில் கொண்டாடி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ராதிகா சரத்குமார் நடிகை மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் கலக்கி வருகிறார். மேலும் தனது ராடான் மீடியா மூலமாக பல நாடகங்கள் மற்றும் படங்களையும் இயக்கி தயாரித்தும் வருகிறார். தற்போது குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். ராதிகா சந்திரமுகி 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்று சொன்னால் அது ஜீன்ஸ் தான். இந்த படத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலமாக பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடிக்கும் வாய்ப்பை இவர் பெற்றிருக்கிறார். பின்னர் படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்த போது, வீட்டிற்குள்ளேயே. முடங்கிவிடாமல் சன் தொலைக்காட்சிகளில் சித்தி என்ற நாடகத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து அவர் அண்ணாமலை, செல்வி, வாணி ராணி, சித்தி பாகம் 2 போன்ற நாடகங்களில் நடித்து மக்கள் மனங்களில் நீங்காத இடத்தை பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று தனது 60-வது பிறந்தநாளை சென்னையில் நேற்று கொண்டாடி இருக்கிறார் ராதிகா இதன் ஏற்பாடுகளை அவரது கணவர் சரத்குமார் செய்திருந்தார். இந்த பார்ட்டியில் நடிகர் சூர்யா, ஜோதிகா, தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த புகைப்படங்களை சரத்குமாரின் மகள் வரலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் ராதிகா சரத்குமாருக்கு தங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..
YouTube Video Code Embed Credits: