23 லட்சம் மதிப்பு நகைகளை போனை வைத்து அசால்ட்டாக திருடிய இளம் பெண்..வைரல் வீடியோ

நகைக்கடகைளில் நடக்கும் திருட்டு சம்பவங்கள் எப்போதும் அதிர்ச்சியை கொடுக்கும். பாதுகாப்பு அம்சங்கள் நிறைய இருந்த போதிலும் அசால்ட்டாக கடையை உடைத்து நகைகளை திருடிச் செல்லும் சம்பவம் ஆங்காங்கே நடைபெற்று வந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் இந்த சம்பவம் சற்று வித்தியாசமானது. கடையில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவரே 23 மதிப்புள்ள தங்க, வெள்ளி பொருட்களை அசால்ட்டாக திருடியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நகைக்கடை ஒன்றில் 47 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கடைகள் வேலை பார்த்த பெண்ணே நகைகளை திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அந்த பெண் எப்படி திருடியுள்ளார் என்ற அதிர்ச்சி வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

23 லட்சம் மதிப்பு நகைகளை போனை வைத்து அசால்ட்டாக திருடிய இளம் பெண்..வைரல் வீடியோ 1

விளம்பரம்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன், இவர் வள்ளியூர் ராதாபுரம் மெயின் ரோட்டில் திருமலை ஜூவல்லர்ஸ் என்கிற பெயரில் நகை கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் நான்கு பேர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ராமச்சந்திரனுக்கு உடல் நலக்குறைவு காரணமாக அவர் கடைக்கு வரவில்லை. இந்நிலையில் கடையில் சோதனை செய்தபோது கடையில் இருந்த சில நகைகள் காணாமல் போனது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான ராமசந்திரன் ஊழியர்களுக்கு தெரியாமல் சிசிடிவிகளை பொருத்தி உள்ளார். தொடர்ந்து நகைக்கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களை ராமச்சந்திரன் சிசிடிவி கட்சியின் மூலம் கண்காணித்தார். அப்போது கடையில் வேலை பார்த்த கலந்தபனை அருகே உள்ள போரூர் கிராமத்தைச் சேர்ந்த சுபா என்ற பெண் அந்த நகைகளை திருடியது தெரிய வந்தது.

தொடர்புடையவை  ஒரு முறையாவது எங்கள வந்து பாத்துட்டு போடா விஜய்...கண்கலங்கிய சந்திரசேகர் | Vijay

23 லட்சம் மதிப்பு நகைகளை போனை வைத்து அசால்ட்டாக திருடிய இளம் பெண்..வைரல் வீடியோ 3

விளம்பரம்

அவர் மொபைல் கேஸ் என்று சொல்லப்படும் போன் கவரில் தினமும் நகைகளை ஒளித்து வைத்து திருடி சென்றுள்ளார். இதனை தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை இருப்பு விவரத்தை சோதனை செய்தார். 47 பவுன் தங்க நகையும், 4 கிலோ எடையுள்ள வெள்ளி நகைகளும் காணாமல் போனது தெரிய வந்தது. இந்த நகைகளின் மதிப்பு 23 லட்சம் ஆகும். இதனால் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளான ராமசந்திரன் வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கடையில் வேலை பார்த்து வந்த சுபாவை கைது செய்து அவர்களிடமிருந்து ஒரே நாளில் நகைகளை மீட்டனர். மேலும் தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த செய்தியை நீங்களும் காண..Watch the below Video..

விளம்பரம்

 

YouTube Video Code Embed Credits: Polimer News

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment