கூட்டத்தில் சிக்கிய விக்ரம், ரசிகர்களை லத்தியால் அடித்து உதைத்த மத்திய ராணுவம், திருச்சியில் பரபரப்பு

திருச்சிக்கு வந்த விக்ரமை பார்க்க குவிந்த ரசிகர்களை மத்திய பாதுகாப்பு படையினர் அடித்து விரட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் நடிப்பில் டிமான்டி காலணி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் லலித் குமார் என்பவர் தயாரித்து வரும் படம்தான் கோப்ரா. இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக கேஜிஎஃப் பட ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கோப்ரா படம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஷூட்டிங் தொடங்கப்பட்டது. சென்னை, ரஷ்யா உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளாக படத்தை முடிக்க முடியாமல் படக்குழு திணறி வந்தது. இந்த நிலையில் படத்தின் இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்து ஆகஸ்ட் 25ம் தேதி ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதனால் படத்திற்க்கான ப்ரோமஷன் வேலைகளை செய்து வருகின்றனர் படக்குழு. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

கூட்டத்தில் சிக்கிய விக்ரம், ரசிகர்களை லத்தியால் அடித்து உதைத்த மத்திய ராணுவம், திருச்சியில் பரபரப்பு 1

விளம்பரம்

அதன் முதல் வேலையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மூன்றாவது பாடலாக உயிர் உருகுதே என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை கவிஞர் மற்றும் பாடலாசிரியர் தாமரை எழுதியுள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் திருச்சியில் உள்ள ஜோசப் கல்லூரியில் இன்று நடைபெற உள்ளது. இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் படக்குழு திருச்சிக்கு வந்தனர். இவர்களை வரவேற்க ரசிகர்கள் விமான நிலையத்தில் கூடியிருந்தனர். விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விக்ரமை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடையவை  கோவிலுக்கு சென்ற யோகிபாபுவுக்கு நடந்த தீண்டாமை கொடுமை.! வைரலாகும் வீடியோ இதோ.!

கூட்டத்தில் சிக்கிய விக்ரம், ரசிகர்களை லத்தியால் அடித்து உதைத்த மத்திய ராணுவம், திருச்சியில் பரபரப்பு 3

விளம்பரம்

இதன் காரணமாக காவல்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த மத்திய பாதுகாப்பு படை ரசிகர்களை லத்தியால் அடித்து துரத்தினர். இதனால் விமான நிலையத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வீடியோவை நீங்களும் காண…Watch the below video…

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: CineUlagam

விளம்பரம்

Leave a Comment