லப்பர் பந்து படத்தில் இருந்து வெளியாகியது நெஞ்சை உருக்கும் ஆசை உறவே பாடல் வீடியோ..!

அட்டகத்தி படத்தின் மூலம் எதார்த்த நடிப்பை காட்டி சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் தினேஷ். இப்படத்தின் மாபெரும் வெற்றி இவரை அட்டகத்தி தினேஷாக மாற்றியது. இப்படத்தை தொடர்ந்து திருடன் போலீஸ் , குக்கூ என நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து அசத்தியிருந்தார். இடையில் இவர் படங்களுக்கு சில சறுக்கல்கள் வந்தாலும் தற்போது மீண்டும் சினிமாவில் கலக்கி வர தொடங்கி இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

லப்பர் பந்து படத்தில் இருந்து வெளியாகியது நெஞ்சை உருக்கும் ஆசை உறவே பாடல் வீடியோ..! 1

விளம்பரம்

இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் இணைந்து நடித்திருக்கும் படம் லப்பர் பந்து. இப்படத்திற்கு சான் ரோல்டன் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தில் இவர்களுடன் காளி வெங்கட்,தேவதர்ஷினி, பாலசரவணன் மற்றும் TSK நடித்து உள்ளனர். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

லப்பர் பந்து படத்தில் இருந்து வெளியாகியது நெஞ்சை உருக்கும் ஆசை உறவே பாடல் வீடியோ..! 3

விளம்பரம்

இப்படத்தில் இடம்பெற்று ஹிட் அடித்த ஆசை உறவே பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. சான் ரோல்டன் இசை மற்றும் குரலில் இப்பாடல் பலத்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருக்கிறது. இப்பாடலில் அட்டகத்தி தினேஷ் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது.

தொடர்புடையவை  கேஜிஎப், ஆர்ஆர்ஆர்-லாம் அசால்ட்டாக தூக்கி சாப்பிட தமிழனின் பொன்னியின் செல்வன் டீஸர் இதோ

விளம்பரம்

Embed Video Credits : SONY MUSIC SOUTH

விளம்பரம்

Leave a Comment