தொடர்ந்து கேலி செய்யும் நெட்டிசன்கள், பதிலடி கொடுத்து பின் பதிவை நீக்கிய சித் ஸ்ரீராம்

தன்னை கேலி செய்பவர்கள் பற்றி ஒரு பதிவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, பின்னர் அதை நீக்கி இருக்கிறார் பிண்ணனி பாடகர் சித் ஸ்ரீராம். கனடாவில் வளர்ந்த சித் ஸ்ரீராம் தன் தாயாரிடம் முறையாக கர்நாடக இசையை கற்றுக் கொண்டார். பின்னர் மேடைகளில் பாடுவது, கச்சேரிகளில் பாடுவது என்ற அவர் படிப்படியாக முன்னேறி வந்தார். வருடம் ஒருமுறை சென்னையில் நடக்கும் மார்கழி உற்சவம் என்ற நிகழ்ச்சிக்காக கனடாவில் இருந்து சென்னை வந்து பங்கேற்று செல்வார். பின்னர் இவருக்கு படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவான கடல் என்கிற படத்தில் அடியே அடியே என்ற பாடலை இவர் முதன்முதலாக பாடினார். இந்த பாடல் மிகப்பெரிய வெற்றி அடையவே இவருக்கு தொடர்ந்து படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் ஐ படத்தில் என்னோடு நீ இருந்தால் பாடல் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பின்னணி பாடி வருகிறார் சித் ஸ்ரீராம்.

விளம்பரம்

பின்னர் தள்ளி போகாதே, மறு வார்த்தை பேசாதே என்று தொடர்ந்து பல நல்ல பாடல்களை பாடி இருக்கிறார். தற்போது வெளியான விருமன் படத்தில் கஞ்சா பூவு கண்ணால என்ற பாட்டையும் அவர் பாடியிருக்கிறார். இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. ஆனால் சித் ஸ்ரீராம் மீது ஒரு குற்றச்சாட்டு எப்போதும் முன் வைக்கப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. அவர் பாட்டை அனுபவித்துப் பாடுகிறேன் என்ற பெயரில் மிக இழுவையாக பாடுகிறார் என்று பலரும் அவரை விமர்சித்து வருவதுண்டு. இவர் பாடிய பாடல்களை மேடையில் லைவ் ப்ரோக்ராமில் பாடும் பொழுது இவர் உணர்ச்சிவசப்பட்டு துள்ளி குதிப்பதும், அந்தப் பாடலை அப்படியே பாடாமல் சில ஸ்வரங்களை போட்டு இழு இழு என இழுப்பதும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. கர்ணன் படத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் கணீர் குரலில் உருவான பாடல் தான் உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது.

விளம்பரம்

இந்தப் பாடலைக் கேட்கும் பலருக்கும் கண்களில் கண்ணீர் வரும் அளவிற்கு மிக உணர்ச்சிப்பூர்வமாக பாடி இருப்பார் சீர்காழி கோவிந்தராஜன். ஆனால் சமீபத்தில் சித் ஸ்ரீராம் அந்த பாடலை ஒரு மேடையில் பாடியிருந்தார். அப்போது அவர் ஸ்வரங்கள் போட்டு பாடலை இழு இழு என இழுத்து பாடினார். அதைக் கேட்ட பலரும் அவரைத் திட்டி தீர்த்தனர். இந்த பாடலை இப்படி கொலை செய்து விட்டீர்களே என்று அவரை திட்டினர். தற்போது மீண்டும் தள்ளி போகாதே பாடலை ஒரு மேடையில் பாடும் போது உணர்ச்சி பெருக்கில் அவர் துள்ளி குதித்து பாடினார். இதை ஒரு மதக் கூட்டத்தில் நடக்கும் சம்பவம் போன்று இணைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ் போட்டு தள்ளினர். இதனால் கடுப்பான சித் ஸ்ரீராம் தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருந்தார். பதிவிட்ட சில நிமிடங்களிலேயே அந்த பதிவை நீக்கியும் இருந்தார்.

தொடர்புடையவை  ஸ்ருதியை தேடி வந்த அம்மா..! குழந்தையை கொடுக்க மறுக்கும் சரவணன்..! வீட்டுக்கு வீடு வாசப்படி ப்ரோமோ..!

தொடர்ந்து கேலி செய்யும் நெட்டிசன்கள், பதிலடி கொடுத்து பின் பதிவை நீக்கிய சித் ஸ்ரீராம் 1

விளம்பரம்

அதில் நானும் எங்கள் குழுவும் எங்கள் ரசிகர்களுக்காகவே பாட்டு பாடி கொண்டிருக்கின்றோம். நீங்கள் அனைவரும் எங்கள் குடும்பம் போன்றவர்கள். இதை நாங்கள் காசு கொடுத்து பார்க்க வரும் மக்களுக்காகவே செய்கின்றோம். இணையத்தில் அமர்ந்து கொண்டு மீம்ஸ் போடுபவர்களுக்காக அல்ல என்று காட்டமாக பதில் அளித்திருந்தார். பின்னர் சில நிமிடங்களிலேயே அந்த பதிவை நீக்கிவிட்டார் சிந்து ஸ்ரீ ராம்.

தொடர்ந்து கேலி செய்யும் நெட்டிசன்கள், பதிலடி கொடுத்து பின் பதிவை நீக்கிய சித் ஸ்ரீராம் 3

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment