குழந்தையாக மாறிய தந்தை.. உப்பு மூட்டை தூக்கி விளையாடிய மைனா.. தந்தை மகள் Cute வீடியோ…

குழந்தை போல் மாறிய தனது தந்தையை மைனா நந்தினி உப்பு மூட்டை தூக்கி விளையாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மைனா என்ற கதாபாத்திரம் மூலமாக அறிமுகமானவர் நந்தினி. இவரை நந்தினி என்று கூறுவதை விட மைனா என்று கூறினால்தான் அனைவருக்கும் தெரியும். திரையுலகிலும் சரி, சின்னத்திரையிலும் சரி, பெண் காமெடியாளர்கள் மிகவும் குறைவு. அப்படியே அவர்கள் வந்தாலும் மிகவும் கஷ்டப்பட்டு வரவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. ஆனால் தனது எதார்த்தமான காமெடியால் பலரையும் சிரிக்க வைத்து கொண்டிருப்பவர் மைனா. இவர் சினிமாவில் பல வாய்ப்புகள் தேடியும் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரைக்குள் நுழைந்தார். சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ததால் அவருக்கு அடுத்தடுத்த நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. மேலும் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்து வருகிறது. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராகவும் அவர் நடித்துள்ளார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

குழந்தையாக மாறிய தந்தை.. உப்பு மூட்டை தூக்கி விளையாடிய மைனா.. தந்தை மகள் Cute வீடியோ... 1

விளம்பரம்

தற்போது கார்த்திக் நடிக்கும் விருமன் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு முதலில் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. அந்த கணவர் தற்கொலை செய்து கொண்டு இறந்ததால் இவர் இரண்டாவதாக யோகி என்ற ஒருவரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். மைனாவும், அவரது கணவர் யோகியும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பின்னர் மிகவும் பிரபலமாகினர். சின்னத்திரையில் மக்களுக்கு பிடித்த ஜோடியாகவும் மாறிப் போயினர். சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் மைனா ஒரு யூடியூப் சேனலையும் தொடங்கி அப்போது வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். மேலும் கணவருடன் இணைந்து இவர் instagram ரீல்ஸ் செய்து அவ்வபோது பதிவேற்றி வருகிறார். இவருடைய வீடியோக்களை பல லட்சம் மக்கள் பார்ப்பது உண்டு.

தொடர்புடையவை  இனிமே குடிக்க மாட்டேன் டா தங்கம்.! அப்பாகிட்ட பேசாம மட்டும் இருக்காத டா.! கதறி அழும் வெற்றி..!

குழந்தையாக மாறிய தந்தை.. உப்பு மூட்டை தூக்கி விளையாடிய மைனா.. தந்தை மகள் Cute வீடியோ... 3

விளம்பரம்

தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. எப்போதும் காமெடியாக ஏதாவது செய்து கொண்டு இருக்கும் மைனா, தற்போது அவரது தந்தையை உப்பு மூட்டை தூக்கிக் கொண்டு அவர் செய்துள்ள வீடியோ பார்பதற்கே மிக அழகாக உள்ளது. கஷ்டப்பட்டு வளர்த்த தனது அப்பா மீது மைனாவுக்கு எப்போதும் தனி பாசம் உண்டு. பல இடங்களில் தனது தந்தை பற்றி அவர் நெகிழ்ந்து பேசியிருக்கிறார். இந்த நிலையில் தனது தந்தையுடன் அவர் குழந்தை போல் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment