சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் தான் திருச்சிற்றம்பலம். இது கடந்த 18ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் தனுஷின் தோழியாக மிக ஆழமான மற்றும் அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை நித்யா மேனன். இந்த படத்திற்கு பின்னர் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் பெருகி உள்ளது. சோபனா போலவே தனக்கும் தோழி வேண்டும் என்று பலரும் தங்களுடைய ஆவலை தெரிவித்து வருகின்றனர். நித்யா மேனன் குறித்து மீம்ஸ்களும் பறந்து வருகிறது. இதே போல் திருச்சிற்றம்பலத்தின் தாத்தாவாக சீனியர் திருச்சிற்றம்பலம் ரோலில் இயக்குனர் பாரதிராஜா படம் முழுவதும் நம்மை சிரிக்க வைத்திருந்தார். எப்போதும் வில்லத்தனத்தை காட்டி வரும் பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் வேறு மாதிரியான தோற்றத்தை கொடுத்திருந்தார்.

தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம், மாறன், தி க்ரேமேன் போன்ற படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகின. இவர் நடிப்பில் கடைசியில் திரையில் வெளியான படம் கர்ணன் மட்டுமே. திரையரங்குகளில் கடைசியாக வெற்றியாக ஓடிய படம் இதுவே ஆகும். ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது திருச்சிற்றம்பலம். தற்போது இந்த படத்தின் வசூல் குறித்து ஒரு தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் படம் வெளியாகி 8 நாட்களில் 51.42 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. வார நாட்கள் என்றாலும் படத்திற்கான வரவேற்பு அதிகமாகவே இருக்கிறது. வார இறுதி நாட்களில் வசூலை குவித்து இருக்கிறது. வெளியான முதல் இரண்டு நாள் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த போதிலும் தற்போது வசூலை குறித்து வருகிறது திருச்சிற்றம்பலம் படம்.

விக்ரம் நடித்துள்ள கோப்ரா படமும், பா ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதி தான் வெளியாகிறது. இதற்கு இன்னும் ஒரு வார காலம் இருக்கும் நிலையில் இந்த படத்திற்கான வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியே இல்லாமல் அடுத்த ஒரு வாரம் திருச்சிற்றம்பலம் மேலும் பல கோடிகளை குவிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.