தேன்மொழி பூங்கொடி பாட்டை தனுஷ் வாய்ஸ்ல கேட்டு இருக்கீங்களா? புது வீடியோ வெளியிட்டுள்ள படக்குழு

ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு வரும் ஒரு படம் தான் திருச்சிற்றம்பலம். கர்ணனனுக்குப் பிறகு இரண்டு வருடங்களுக்குப் பிறகு தனுஷின் படம் ஒன்று திரையரங்குகளில் வெளியாகி வசூலை குவித்து வருகிறது என்றால் அது இந்த திருச்சிற்றம்பலம் தான். இந்த படத்தை தனுசுடன் இணைந்து மித்ரன் ஆர் ஜவகர் இயக்கியிருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் போன்ற மூன்று ஹீரோயின்கள் நடித்திருந்தனர். மேலும் தனுஷிற்கு தந்தையாக பிரகாஷ் ராஜும், தாத்தாவாக பாரதிராஜாவும் நடித்திருந்தார்கள். படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

தேன்மொழி பூங்கொடி பாட்டை தனுஷ் வாய்ஸ்ல கேட்டு இருக்கீங்களா? புது வீடியோ வெளியிட்டுள்ள படக்குழு 1

விளம்பரம்

படத்தில் ஏற்கனவே நான்கு பாடல்கள் இடம்பெற்று இருந்தது. குறிப்பாக தாய் கிழவி, மேகம் கருக்குதா, லைப் ஆஃப் பழம், தேன்மொழி பூங்கொடி போன்ற நான்கு பாடல்கள் இடம் பெற்றிருந்தது. இதில் நான்கு பாடல்களுமே மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. குறிப்பாக தேன்மொழி பூங்கொடி என்ற பாடல் சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார். இந்த பாடல் பலரையும் முணுமுணுக்க வைத்திருக்கிறது. மேகம் கருக்காதா மற்றும் தாய்க்கிழவி பாடல்கள் பலரும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து பதிவேற்றி வந்தனர். வெகு நாட்களுக்குப் பிறகு தனுஷ் மற்றும் அனிருத் காம்போ பாடல்களில் மாயாஜாலம் செய்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. படத்தின் இசையும், பேக்ரவுண்ட் மியூசிக்கும் படத்திற்கு மிகப்பெரிய பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடையவை  யோவ் விஸ்வநாதன்.! வெளிய வாயா.! காதம்பரி அப்பாவை கிழித்து தொங்கவிட்ட சக்தி

தேன்மொழி பூங்கொடி பாட்டை தனுஷ் வாய்ஸ்ல கேட்டு இருக்கீங்களா? புது வீடியோ வெளியிட்டுள்ள படக்குழு 3

விளம்பரம்

படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இணையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. பலரும் தேன்மொழி பூங்கொடி பாடலை பலரும் தனுஷ் குரலில் கேட்க ஆசைப்பட்டனர். அந்தப் பாடலை மயக்கமா கலக்கமா என்று தனுஷ் பாடி இருக்கும் வெர்ஷனை தற்போது படக்குழு வெளியிட்டு இருக்கிறது. தனுஷின் குரலில் கேட்கவே மிக அருமையாக இருக்கும் அந்த பாடலை நீங்களும் கேட்க.. Watch the below Video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Sun Tv

விளம்பரம்

Leave a Comment