மொக்கை ஜோக் போட்டு சாகடிக்கும் அதிதியை, மரணமாக கலாய்த்து மதுரை முத்து போட்ட வீடியோ..!

சமீப காலமாகவே நடிகை அதிதி குறித்த ட்ரோல்கள் மற்றும் மீம்ஸ்கள் இணையதளத்தில் வைரலாகி வருவது வழக்கமாக இருக்கிறது. கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தின் மூலமாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை அதிதி. இவர் இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் ஆவார். இவர் மருத்துவம் படித்திருந்த போதிலும் திரைத்துறையின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக திரைத்துறைக்கு காலடி எடுத்து வைத்தார். சிறுவயதிலிருந்து நடிப்பு, பாட்டு, நடனம் ஆகியது ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் முறையாக பரதநாட்டியம் கற்றுக் கொண்டுள்ளார். பின்னர் கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி, வெஸ்டர்ன் என இசையிலும் கைதேர்ந்தவராக இருக்கிறார். விருமன் படத்திலும் ஒரு பாடலை பாடியிருக்கிறார். சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு போட்டியில் பரதநாட்டியம் ஆடி இருக்கிறார்.

மொக்கை ஜோக் போட்டு சாகடிக்கும் அதிதியை, மரணமாக கலாய்த்து மதுரை முத்து போட்ட வீடியோ..! 1

விளம்பரம்

இவருக்கு சங்கரின் மகள் என்பதாலேயே இவ்வளவு சலுகை காட்டப்படுகிறது என்ற விமர்சனங்களும் இணையத்தில் எழத் தொடங்கின. இதை அதிதியும் மறுக்கவில்லை. சங்கரின் மகள் என்ற முறையில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது என்றாலும், தன் திறமையால் தான் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். மக்கள் ரசித்தால் தான் திரைத்துறையில் நிற்க முடியும் என்று அவர் விளக்கம் அளித்திருந்தார். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, மேடைகளில் சமீப காலமாக மொக்கை ஜோக் போட்டு சாகடித்து வருகிறார் அதிதி. இதனால் பல ட்ரோல்ஸ் மற்றும் மீம்ஸ்களுக்கு ஆளாகி இருக்கிறார். ஒரு மேடையில் பேசும்பொழுது சண்டே அன்னைக்கு சண்டை போட முடியும், மண்டே அன்றைக்கு மண்டைய போட முடியுமா? என்று அவர் பேசிய வீடியோ வைரலானது. பின்னர் அதிதியை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

தொடர்புடையவை  நொடிக்கு நொடி பரபரப்பு.! மரண பயத்தை கொடுக்கும் 'டிமான்டி காலனி 2' ட்ரைலர் இதோ.!

மொக்கை ஜோக் போட்டு சாகடிக்கும் அதிதியை, மரணமாக கலாய்த்து மதுரை முத்து போட்ட வீடியோ..! 3 மொக்கை ஜோக் போட்டு சாகடிக்கும் அதிதியை, மரணமாக கலாய்த்து மதுரை முத்து போட்ட வீடியோ..! 5 மொக்கை ஜோக் போட்டு சாகடிக்கும் அதிதியை, மரணமாக கலாய்த்து மதுரை முத்து போட்ட வீடியோ..! 7 மொக்கை ஜோக் போட்டு சாகடிக்கும் அதிதியை, மரணமாக கலாய்த்து மதுரை முத்து போட்ட வீடியோ..! 9 மொக்கை ஜோக் போட்டு சாகடிக்கும் அதிதியை, மரணமாக கலாய்த்து மதுரை முத்து போட்ட வீடியோ..! 11 மொக்கை ஜோக் போட்டு சாகடிக்கும் அதிதியை, மரணமாக கலாய்த்து மதுரை முத்து போட்ட வீடியோ..! 13 மொக்கை ஜோக் போட்டு சாகடிக்கும் அதிதியை, மரணமாக கலாய்த்து மதுரை முத்து போட்ட வீடியோ..! 15

விளம்பரம்

தற்போது பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் மதுரை முத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிதியை கலாய்ப்பது போன்று ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அதில் மதுரை முத்துவிடம் ஒருவர் உன் கொட்டத்தை அடக்க ஒருத்தன் வருவான் டா… வந்துட்டான் டா..என்று சொல்வது போலவும், அப்போது அதிதி அங்கே வந்து ஒரு மொக்கை ஜோக் சொல்வது போலவும், ஒரு காமெடியான காணொலியை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment