மக்கள் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சிகளில் ஒன்றுதான் விஜய் டிவி. இந்த டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என்று அனைத்துமே மக்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளாக இருக்கிறது. இதில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2, மௌன ராகம் போன்ற தொடர்கள் டாப் ஹிட் தொடர்களாக இருக்கின்றது. எனினும் பிற தொடர்களையும் மக்கள் பார்க்காமல் இல்லை. அந்த தொடர்களுக்கும் மக்கள் தங்களுடைய ஆதரவை கொடுத்து தான் வருகிறார்கள். அப்படி ஒரு தொடர் தான் சிப்பிக்குள் முத்து. இந்தத் தொடரில் ஹீரோவாக வருபவர் ஏதோ ஒரு விபத்தினால் புத்தி பேதலித்து இருக்கிறார். இவர் கதாநாயகியின் தங்கை காதலித்து வரும் நபரின் அண்ணன் ஆவார். தங்கை இவரின் தம்பியை காதலிப்பதால், அக்காவான ஹீரோயின் இந்த புத்தி சரியில்லாத கணவரை திருமணம் செய்து கொள்ள நேர்ந்தது.

தற்போது இந்த ஹீரோவை திருமணம் செய்து கொண்ட ஹீரோயின் இவரை எப்படியாவது சரி செய்து விட வேண்டும் என்று முனைப்பில் இருக்கிறார். ஹீரோவுக்கும் அடிக்கடி தன்னுடைய பழைய நினைவுகள் வந்து போய்க்கொண்டே இருக்கிறது. நெருப்பை பார்த்து பயந்து கொள்ளும் ஹீரோவை அதிலிருந்து மீட்டுக் கொண்டு வந்துள்ளார். மேலும் ஒரு ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று அவருக்கு மருத்துவம் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக பழைய நினைவுகளை கொண்டு வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார் ஹீரோயின். கதை இப்படி நகர்ந்து கொண்டிருக்க இடையில் வரும் காட்சிகளால் நெட்டிசன்கள் இந்த தொடரை மீம்ஸ் போட்டு மரணமாக கலாய்த்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் இந்த ஹீரோ செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் தான். ஹீரோவிற்கு புத்தி சரியில்லாத போதிலும் சில குளியலறை காட்சிகளில் ரொமான்ஸில் பின்னி எடுக்கிறார்.

தனது மனைவி அருகில் வரும் பொழுதும், கணவரை குளிக்க வைக்கும் பொழுதும் ஹீரோவுக்கு ரொமான்ஸ் மூடு வந்து விடுகிறது. குறிப்பாக இந்த காட்சிகளில் ஹீரோயினை வச்ச கண்ணு வாங்காமல் புத்தி சரியில்லாத ஹீரோ பார்க்கும் பொழுதும், பின்னால் அதற்கு ஏற்ற மாதிரி ஒரு காதல் பாடலை ஓட விடும் பொழுதும் இந்த சீன்களை பார்க்கும் மக்கள் சிரித்து விடுகின்றனர்.

மேலும் மீம்ஸ் கிரியேட்டர்கள் எப்படி இந்த காட்சி எடுக்கும் போது மட்டும் பைத்தியம் தெளிந்து விடுகிறது? ஹீரோவுக்கு ரொமான்ஸ் வந்து விடுகிறது? என்று ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர். பலரும் கமெண்டிலும் மீன்களிலும் இந்த நாடகத்தை ட்ரோல் செய்து வருகின்றனர்.
Youtube Video Code Embed Credits: Vijay Television