தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் நடிகர் விக்ரம். இவர் ஹாலிவுட் ஹீரோக்களை போல படத்திற்கு தேவை என்றால் உடலை அபரிமிதமாக ஏற்றுவதும், இல்லை என்றால் உடலை வெகுவாக இளைக்கும் திறமையும் கொண்டவர். நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர். தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கோப்ரா. இந்த படத்தை சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே எடுக்க ஆரம்பித்து தற்போது தான் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை 7 ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக கேஜிஎப் பட ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இவர்கள் மட்டுமில்லாமல் மிருனாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜ், இர்ஃபான் பதான் போன்ற பலரும் இவருடன் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் மூன்று ஆண்டுகளுக்கு பின்பு வெளியாவதால் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இன்று இந்த படத்தின் முதல் காட்சிகள் அதிகாலை நான்கு மணிக்கே திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. நான்கு மணி முதல் இந்த படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் குவிந்து வந்தனர். கணக்கு வாத்தியாராக வேலை பார்த்து வரும் விக்ரம், வில்லனின் எதிரிகளை சீக்ரெட் ஏஜென்ட் போல் இருந்து கணித நுட்பங்களை பயன்படுத்தி கொலை செய்கிறார். அதுதான் படத்தின் பின்னணி கதை. இவர் எப்படி கொலை செய்கிறார்? எப்படி போலீஸிடம் இருந்து தப்பிக்கிறார் என்பது பற்றிய கதைதான் கோப்ரா. ஆனால் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் படம் நன்றாக இல்லை என்ற கருத்தையே தெரிவித்துள்ளனர். சிலர் நன்றாக இருக்கிறது என்று கூறிய நிலையில், பலரும் நன்றாக இல்லை என்று கூறி வருகின்றனர்.
படம் ஒண்ணுமே புரியல.. 3 தடவை பாத்தா தான் புரியும் போல.. கோப்ரா படம் பற்றி மக்கள் கருத்து pic.twitter.com/Fo6NVjHIER
— Yarro Oruvan 12 (@ramrabi11) August 31, 2022
படத்தின் கதையை எப்படியோ ஆரம்பித்து பின்னர் எப்படி எப்படியோ கொண்டு சென்று விட்டனர் என்றும், கதை புரியவே இல்லை என்றும், இரண்டாம் பாகத்தில் திருப்பங்களை அவிழ்கிறேன் என்கிற பெயரில் என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரியவில்லை என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர். மேலும் படம் மூன்று மணி நேரம் நீளம் என்பதால் உட்காரவே முடியவில்லை என்றும் கருத்து தெரிவித்தனர். அவர்களின் கருத்துக்களை நீங்களும் காண.. Watch the below video..
YouTube Video Code Embed Credits: Chennai Day