கடுமையான விமர்சனத்தால் படத்தின் காட்சிகளை வெட்டி எறிந்து அதிரடி காட்டிய தயாரிப்பு நிறுவனம்

ரசிகர்கள் திரைவிமர்சகர்கள் ஆகியோர் கருத்துக்கு மதிப்பளித்து கோப்ரா படத்திலிருந்து சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக அதனுடைய தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுமார் 20 நிமிடம் வரை காட்சிகளை நீக்கி உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் படத்தின் நீளம் சற்று சோர்வை ஏற்படுத்துவதாக கருத்து கூறி வந்தனர். திரை விமர்சகர்களும் இதே கருத்தை தான் கூறிவந்தனர். மூன்று மணி நேரம் படம் என்பதால் உட்கார முடியவில்லை, இதனால் நேரத்தை குறைத்தால் நன்றாக இருக்கும் என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

கடுமையான விமர்சனத்தால் படத்தின் காட்சிகளை வெட்டி எறிந்து அதிரடி காட்டிய தயாரிப்பு நிறுவனம் 1

விளம்பரம்

ஏற்கனவே இந்த படத்தின் நேரத்தை 40 நிமிடம் வரை குறைக்க தயாரிப்பாளர் லலித் குமார் இயக்குனர் அஜய் ஞானமுத்துவிடம் வலியுறுத்தி இருக்கிறார். ஆனால் இயக்குனர் தயாரிப்பாளர் கூறிய அந்த கருத்தை ஏற்கவில்லை. இந்த நிலையில் 3 மணி நேரம் 3 நிமிடம் மூன்று வினாடிகள் ஓடக்கூடிய அளவில் படம் திரையரங்குகளில் வெளியானது. படத்தின் நீளத்தால் பலரும் படத்தை திட்டி தீர்த்தனர். எனவே படத்தின் நேரத்தை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது 20 நிமிட காட்சிகளை பட குழு நீக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். திரைத்துறையினர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் ஆகியோரின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து படத்தின் நேரத்தை 20 நிமிடங்கள் குறைத்து இருப்பதாக பட குழு தெரிவித்துள்ளது.

தொடர்புடையவை  செம்ம மாஸாக வெளியானது சூர்யா 42 மோஷன் போஸ்டர்.. வீடியோ வெறித்தனமா இருக்கு

கடுமையான விமர்சனத்தால் படத்தின் காட்சிகளை வெட்டி எறிந்து அதிரடி காட்டிய தயாரிப்பு நிறுவனம் 3

விளம்பரம்

நீக்கப்பட்ட காட்சிகளுடன் இன்று (செப்டம்பர் 1) மாலை காட்சிகள் திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன. காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதால் படத்தின் விறுவிறுப்பு அதிகமாகி படம் சுவாரசியத்தை ஏற்படுத்தும் என்று ரசிகர்களும் படக்குழுவும் நம்புகின்றனர்.

கடுமையான விமர்சனத்தால் படத்தின் காட்சிகளை வெட்டி எறிந்து அதிரடி காட்டிய தயாரிப்பு நிறுவனம் 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment