மக்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் முதலிடம் வகிக்கிறது விஜய் தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் சிப்பிக்குள் முத்து. இந்த தொடர் ஒளிபரப்பப்பட்ட நாள் முதலே பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நாடகத்தின் கதை என்னவென்றால் அண்ணன் தம்பி இருவரில் அண்ணன் சற்று மன நோய் உடையவர், ஒரு விபத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதில் தம்பி ஒரு பெண்ணை காதலித்து வருகிறார். இதனால் தம்பி காதலிக்கும் பெண்ணின் அக்கா, மனநலம் பாதித்த அண்ணனை திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். மனநலம் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அண்ணனை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அவர் மன நலனை எப்படியாவது திருப்பிக் கொண்டு வந்து விட வேண்டும் என்று பாடுபடுகிறார் அந்த மனைவி.

ஆனால் இந்த கதை ஆரம்பித்த நாள் முதலாகவே பலரும் இந்த கதையை விமர்சித்து வருகின்றனர். அதற்கு காரணம் இதில் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும் ஹீரோ திடீரென்று ரொமான்ஸ் மூடிற்கு மாறிவிடுகிறார். குறிப்பாக குளிக்கும் போதும், குளித்துவிட்டு வந்து தலை துவட்டும் போது என்று திடீரென ரொமான்ஸ் மூடிற்க்கு செல்லும் அவர், தனது மனைவியை வைத்த கண் பார்க்காமல் பார்க்கிறார். இதனால் இந்த நாடகம் நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டது. பலரும் ஹீரோவை ஒரு பார்ட் டைம் பைத்தியம் என்றும், அது எப்படி திமிங்கலம் குளிக்கும் போது மட்டும் இவருக்கு ரொமான்ஸ் மூடு வருகிறது என்றும், குளிக்கும் போது மட்டும் பைத்தியம் தெளிவாகி விடுமா என்று எல்லாம் மீம்ஸ் போட்டு கலாய்த்து தள்ளினார்.

இந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. அதில் ஹீரோயின் கர்ப்பமாக இருப்பது போலவும் அவருக்கு வளைகாப்பு போட்டிருப்பது போல் கை நிறைய வளையல்களும் மாலை கன்னத்தில் சந்தனங்களும் வைக்கப்பட்டுள்ளது இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அலறிப் போய் இருக்கின்றனர் சமீபத்தில் தானே இவர்கள் இருவருக்கும் முதலிரவு காட்சிகள் நடந்தது போல் காட்டினார்கள் அதற்குள்ளே வளைகாப்பு வந்துவிட்டதா என்று அதற்கும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
