அமீர் பாவனி, இறுதிசுற்று நடனம்.! கைத்தட்டல்களால் அதிர்ந்த அரங்கம், உறைந்து போன ரம்யா கிருஷ்ணன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நடன நிகழ்ச்சி ஆன பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்துள்ளது. இதன் வெற்றியாளர்களாக அமீர் பாவனியும், சுஜாவருணி சிவகுமார் ஜோடிகளும் அறிவிக்கப்பட்டிருந்தனர். முதல்முறையாக இருவருக்கு முதல் பரிசு கொடுக்கப்பட்டிருப்பது இந்த சீசனில் தான். பிக்பாஸில் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது விஜய் டிவி. சீசன் 1ல் ஷாரிக் மற்றும் அனிதா சம்பத் டைட்டிலை வென்று இருந்தனர். இதைத்தொடர்ந்து சீசன் 2வை நடத்த திட்டமிட்டு இருந்தது. இந்த சீசனை பிரியங்காவும் பிக்பாஸ் வின்னர் ராஜூவும் தொகுத்து வழங்கி வந்தனர். இதில் நடுவர்களாக நடன இயக்குனர் சதீஷும், ரம்யா கிருஷ்ணனும் இருந்து வந்தனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

அமீர் பாவனி, இறுதிசுற்று நடனம்.! கைத்தட்டல்களால் அதிர்ந்த அரங்கம், உறைந்து போன ரம்யா கிருஷ்ணன் 1

விளம்பரம்

பிபி ஜோடிகள் சீசன் 2வில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். அமீர்-பாவனி, சுஜாவருணி-சிவகுமார், தாமரை மற்றும் அவரது கணவர், நடிகை ஆர்த்தி மற்றும் கணேஷ், அபிஷேக் ராஜா மற்றும் நாடியா போன்றவர்கள் இறுதி சுற்று வரை வந்திருந்தனர். இந்த இறுதிச்சுற்றில் அமீர் பாவனியும், சுஜா வருணி-சிவகுமார் ஜோடிகள் முதல் இடத்தை பெற்றிருந்தனர். வெற்றி பெற்ற பின்பு பாவனி அமீரின் காதலை ஏற்பதாகவும், அமீரை திருமணம் செய்து கொள்ள சம்மதமும் தெரிவித்து இருந்தார். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே பதிவிட்டு இருந்தார். பிக்பாஸில் இருந்த போதே அமீர் பாவனியை காதலிப்பதாக கூறி வந்தார். இந்த நிலையில் ஆடவே தெரியாத தன்னை ஆட வைத்து முதல் பரிசையும் வாங்கிக் கொடுத்த அமீரின் காதலை ஏற்று இருக்கிறார் பாவனி.

தொடர்புடையவை  500 ரூபாய் கட்டை அப்படியே எரித்த பிக்பாஸ் தனலட்சுமி..! வைரலாகும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்.!

அமீர் பாவனி, இறுதிசுற்று நடனம்.! கைத்தட்டல்களால் அதிர்ந்த அரங்கம், உறைந்து போன ரம்யா கிருஷ்ணன் 3

விளம்பரம்

தற்போது இவர்கள் இருவரும் இறுதிச்சுற்றில் ஆடிய வீடியோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. பாகுபலி படத்தில் வரும் தீரனே பாடலுக்கு இருவரும் வெறித்தனமாக நடனமாடியுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment