2வது திருமணத்தை மறைத்து நாடகம்.. நீதிமன்றத்தில் வசமாக மாட்டிய அமலா பால்..

நடிகை அமலா பாலுக்கும் அவரது ஆண் நண்பர் பவீந்தர் சிங் என்பவருக்கும் திருமணமானது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழின் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலாபால். இவருக்கும் இயக்குனர் ஏஎல் விஜய்க்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் திருமண வாழ்க்கை கசந்ததால் இருவரும் 2017 ஆம் ஆண்டு பிரிந்து விட்டனர். இதில் ஏ.எல் விஜய்க்கு இன்னொரு திருமணம் ஆகி, அவர் தனியாக வசித்து வரும் நிலையில், அமலா பால் தன்னுடைய ஆண் நண்பரான பாடகருடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் தனது ஆண் நண்பர் மீது அமலாபால் புகார் ஒன்றை அளித்தார். அதில் தன்னுடன் திருமணம் ஆகாத நிலையில் திருமணம் ஆகிவிட்டது என்று சில புகைப்படங்களை பவீந்தர் சிங் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்ததாகவும், மேலும் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பரவ விடுவேன் என்று மிரட்டுவதாகவும் புகாரில் கூறியிருந்தார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

2வது திருமணத்தை மறைத்து நாடகம்.. நீதிமன்றத்தில் வசமாக மாட்டிய அமலா பால்.. 1

விளம்பரம்

விழுப்புரம் அருகே ஆரோவில் தனக்கு சொந்தமான வீட்டில் தங்கி இருந்தபோது, பவிந்தர் சிங் உள்ளிட்ட சிலர் தன்மீது பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும் அமலாபால் பவிந்தர் சிங் மீது பல குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இதனால் விழுப்புரம் காவல் துறையினர் பவிந்தர் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தது. பவிந்தர் சிங் மீது மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தார் மீதும் 16 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று வானூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார் பவீந்தர் சிங்.

தொடர்புடையவை  பிகிலுக்கு பொருளாதார ரீதியாக இழப்பு!

2வது திருமணத்தை மறைத்து நாடகம்.. நீதிமன்றத்தில் வசமாக மாட்டிய அமலா பால்.. 3

விளம்பரம்

வழக்கு விசாரணையில் அமலா பாலுக்கும் தனக்கும் திருமணமானதாக சான்றிதழை பவிந்தர் சிங் தாக்கல் செய்தார். இதன் மூலம் இருவருக்கும் பதிவு திருமணம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏழாம் தேதி பஞ்சாப் மாநிலம் புஷ்கரிலுள்ள ராதிகா பேலஸ் என்னும் திருமண மண்டபத்தில் இவர்கள் இருவரின் திருமணம் நடைபெற்றதாக ஆதாரத்துடன் மனு அளித்திருந்தார். இதன் உண்மை தன்மையை ஆராய்ந்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் பவீந்தர் சிங்குடன் அமலா பாலுக்கு திருமணம் ஆனது உறுதியாகி உள்ளது. தனக்கு திருமணமாகவில்லை நண்பர்களாக தான் வாழ்கிறோம் என்று அமலாபால் பொய் கூறியிருப்பது இந்த சான்றிதழ் மூலமாக உறுதியாகி உள்ளது. அந்த செய்தியை நீங்களும் காண… Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Thanthi Tv

விளம்பரம்

Leave a Comment