வங்காளதேசத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேராக மோதியதில்15 பேர் பலி!!

வங்காளதேசத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேராக மோதியதில்15 பேர் பலி!! 1

வங்கதேசத்தில் பிரமன்பாரியா பகுதியில் இன்று அதிகாலை 3 மணிக்கு தலைநகர் டாக்கா நோக்கி சென்றுள்ள பயணிகள் ரயில், எதிர் திசையில் சிட்டகாங் நோக்கி பயணிகள் ரயிலுடன் நேருக்கு நேராக மோதியது.

விபத்து நடந்த நேரத்தில் ரெயிலில் இருந்த பெரும்பாலான பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்த கோர விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு ரயில்களிலும் இருந்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

விளம்பரம்

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இரண்டு ரயில்களில் ஒரு ரயில் சிக்னலை கவனிக்காமல் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.விபத்தில் பலியானவர்களுக்கு வங்காளதேச பிரதமர் சேக் ஹசீனா இரங்கல் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

Leave a Comment